தமிழ் சினிமாவில் ‘பாய்ஸ்’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். இதைத்தொடர்ந்து ஆயுத எழுத்து, எனக்குள் ஒருவன், காவியத்தலைவன் போன்ற பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக திரைத்துறையில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டுள்ளார் நடிகர் சித்தார்த். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்துள்ளார். இவர் ஆங்கிலத்திலும் ஒரு படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் நடிகராக மட்டுமல்லாமல் கதையாசிரியர், தயாரிப்பாளர் மற்றும் பாடகர் என பன்முக திறமைகளோடு திரையுலகில் வலம் வந்து கொண்டுள்ளார். தற்பொழுது இவர் கமலஹாசன் நடிப்பில் உருவாகி வரும் ‘இந்தியன்2’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவ்வப்பொழுது சர்ச்சைகளில் சிக்கும் இவர் திரைப்படங்களில் நடித்து பிரபலமானதை விட சர்ச்சைகளில் சிக்கி பிரபலமானதே அதிகம். இந்நிலையில் நடிகர் சித்தார்த் நடிப்பில், அருண்குமார் இயக்கத்தில் உருவான திரைப்படம் ’சித்தா’.
இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடைந்து ரிலீஸ்க்கு தயாராக உள்ளது. இந்த நிலையில் படத்தின் ப்ரோமோஷன் வேளைகளில் நடிகர் சித்தார்த் மும்முரமாக இறங்கியுள்ளார். அதன்படி நேற்று இவர் பெங்களூருவில் ‘சித்தா’ படம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது திடீரென அரங்குக்குள் நுழைந்த கன்னட அமைப்பினர் தகராறில் ஈடுபட்டு, சித்தார்த் முன்பு சூழ்ந்துகொண்டு முழக்கம் எழுப்பினர். அப்போது அவர்கள், ‘காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக பந்த் நடந்துகொண்டிருக்கும் நிலையில், இதெல்லாம் தேவையா? உடனே பத்திரிகையாளர் சந்திப்பை நிறுத்துங்கள்’ என்று எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, நன்றி தெரிவித்துக்கொண்டு நடிகர் சித்தார்த் மேடையிலிருந்து இறங்கிச் சென்றார். இது தொடர்பான வீடியோ தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…
பொதுவெளியில் பெற்றோர்களுக்கிடையே நிகழும் வன்முறைச் சம்பவங்கள், அங்கிருக்கும் குழந்தைகளை வெறும் பார்வையாளர்களாக மட்டும் வைப்பதில்லை; மாறாக, அவர்களின் மன உலகைப்…
ஒரு நாள், கடுமையான பசியால் வாடிய பிச்சைக்காரன் ஒருவன், மிகுந்த சிரமப்பட்டு தனக்காகச் சேகரித்த சிறிதளவு உணவை வைத்திருந்தான். அப்போது,…
தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக மற்றும் தவெக இடையேயான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளது. முதல்வர் விஜய்…
தமிழத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி அமைந்தது முதலே, சட்டம்-ஒழுங்கு விவகாரங்களை மையமாகக் கொண்டு திமுகவுக்கும் தவெக-வுக்கும் இடையிலான இணைய…
பீகாரின் முங்கர் மாவட்டத்தில் உள்ள அசர்கஞ்ச் வட்டாரத்தைச் சேர்ந்த ஜலாலாபாத், நாராயண்பூர், மில்கி, ஜோதரி மற்றும் அத்ராஸ் ஆகிய ஐந்து…
திமுகவின் முக்கிய முகமாகவும், முன்னாள் அமைச்சருமான அன்பில் மகேஷ் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம்…