Categories: சினிமா

ஸ்பெஷலான அந்த நபர் வந்தால்… திருமணம் குறித்து மனதில் உள்ளதை சொன்ன ஸ்ருதிஹாசன்..!

Spread the love

உலக நாயகன் கமல்ஹாசனின் மகள் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் நடிகை ஸ்ருதிஹாசன். கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ஹேராம் என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். தமிழ் சினிமாவில் நடிகையாக மட்டுமல்லாமல் ஒரு சிறந்த பாடகியாகவும் அறியப்பட்டார். இவர் முதன் முதலில் தமிழில் ஏழாம் அறிவு என்ற திரைப்படம் மூலம் தான் பிரபலமானார். ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் சுருதிஹாசனுக்கு மிகப்பெரிய அறிமுகமாக அமைந்தது.

#image_title

அந்த திரைப்படத்தை தொடர்ந்து தனுஷ் உடன் 3 என்ற திரைப்படத்தில் ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடித்த இளைஞர்களின் மனதை கொள்ளை அடித்தார். அந்தத் திரைப்படம் வெளியானபோது கிடைத்த வரவேற்பை காட்டிலும் ரீ ரிலீஸ் சமயத்தில் மிகப்பெரிய தாக்கத்தை இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்தி இருந்தது. இன்றளவும் அந்த திரைப்படத்திற்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யா மற்றும் விஜய் என முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் ஜோடி போட்டு நடித்தார்.

#image_title

இருந்தாலும் அவரால் முன்னணி நடிகையாக வர முடியவில்லை. தமிழ் சினிமாவில் பெரிய அளவு திரைப்பட வாய்ப்பு எதுவும் கிடைக்காததால் தெலுங்கு சினிமா பக்கம் திரும்பினார். அங்கு மூத்த நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிசியான நடிகையாக உள்ளார். தற்போது கூலி படத்தில் நடித்து வருகிறார். இவர் இதற்கு முன்பாக சாந்தனு ஹசாரிகா என்பவருடன் லிவ் இன் உறவில் இருந்தார். ஆனால் திடீரென பிரேக்கப் செய்து கொண்டு பிரிந்துவிட்டார்கள்.  சமீபத்தில் கூட திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், “திருமணம் செய்யுறதை விட ரிலேஷன்ஷிப்பில் இருப்பதையே விரும்புகிறேன். என்னுடைய வாழ்க்கையில் திருமணமே செய்யமாட்டேன்னு சொல்ல மாட்டேன். Never என்ற வார்த்தையை என்னால் சொல்லவே முடியாது. வாழ்க்கை என்பது unpredictable. அதனால் ஸ்பெஷலான ஒருவர் வந்தால் அதை பத்தி யோசிக்கலாம். ஆனால் அது நடக்கும்னு எனக்கு தோன்றவில்லை” என்று கூறியுள்ளார்.

Soundarya

Recent Posts

அம்மாடியோவ்… கைவிலங்கு அணிந்து 101 கி.மீ மலைப்பாதையை… கடந்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த தம்பதி… இணையத்தில் பாராட்டும் நெட்டிசென்கள்…!!

ஸ்பெயினைச் சேர்ந்த காவல்துறை தம்பதியரான ஜெசிகா முனோஸ் பரேடஸ் மற்றும் பெலாயோ அல்வாரெஸ் ரெவூல்டா ஆகியோர், ஒருவருக்கொருவர் கைவிலங்கு அணிந்தபடி…

23 minutes ago

ஐயோ… என்னது இது?… ரயிலில் பயணியின் உணவில்… கிடந்த உலோகத் துண்டு… ஊழியர் கொடுத்த விளக்கம்… IRCTC-யின் அதிரடி ஆக்‌ஷன்…!

குவஹாத்தி செல்லும் ரயிலில் பயணம் செய்த அமித் அவஸ்தி என்ற பயணி, தனது உணவில் பாதிக்கு மேல் சாப்பிட்ட பிறகு…

27 minutes ago

திக் திக் நிமிடங்கள்… எதுவுமே வேலை செய்யல?… ரயில் விபத்திற்கு நொடிக்கு முன் இன்ஜின் அறையில்… ஓட்டுநர் கதறிய பகீர் வீடியோ… இணையத்தில் வைரல்…!

அசாம் ரயில் விபத்து நிகழ்வதற்குச் சற்று முன்பு, ரயில் இன்ஜின் அறைக்குள் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.…

38 minutes ago

அதிர்ச்சி… 150 கோடியை நெருங்கும் இந்திய மக்கள் தொகை… வைரலாகும் டெல்லி AIIMS டிஜிட்டல் பலகை…!!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள இந்திய மக்கள் தொகை கணக்கீட்டு பலகையின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.…

51 minutes ago

காரை நிறுத்தச் சொன்ன காவலரை 200 மீட்டர் தூரம் பறக்கவிட்ட ஓட்டுநர்….. மிரள வைக்கும் அதிர்ச்சி சம்பவம்…. வைரலாகும் வீடியோ….!

மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டம் பன்வெல் அருகே உள்ள களம்போலி பகுதியில் கடந்த திங்கள்கிழமை இரவு காவல்துறையினர் வழக்கமான 'நாகாபந்தி'…

58 minutes ago

“ஐயோ சாவு இப்படியா வரணும்?”…. கண் இமைக்கும் நேரத்தில் முடிந்த நாட்டிய கனவு… நெஞ்சை பதைபதைக்க வைக்கும் ஷாக்கிங் வீடியோ….!

கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் அருகேயுள்ள மத்திக்கோடு பகுதியில் நிகழ்ந்த கோர இருசக்கர வாகன விபத்தில், பூதப்பாண்டியைச் சேர்ந்த 13 வயது…

1 மணத்தியாலம் ago