சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக களத்தில் இறங்கி பணியாற்றி வரும் நிலையில் அதிமுக மற்றும் திமுக இடையே போட்டி என்ற நிலை மாறி தற்போது விஜயும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாக பார்க்கப்படுகிறது. தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் அடுத்தடுத்து தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகின்றார். சமீபத்தில் கரூர் விவகாரத்தில் சிக்கலில் இருந்த விஜய் அதிலிருந்து தற்போது மெல்ல மெல்ல மீண்டும் வந்து கட்சியை வலுப்படுத்தும் நோக்கத்தில் ஈடுபட்டுள்ளார். நேற்று முன்தினம் கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதனையடுத்து மீண்டும் அரசியல் பணிகளில் களமிறங்கியுள்ளார். அந்தவகையில் தவெகவின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்க புதிய குழு ஒன்று நியமிக்கப்பட்டு உள்ளது. அதில் N.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், நிர்மல் குமார், விஜயலட்சுமி என பட்டியல் நீளுகிறது. இதில் பெரும்பாலும் ஆதவ்வின் ஆதரவு ஆட்களே உள்ளனர். மாறாக கட்சி பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு ஆதரவான நபர்கள் மொத்தமாக ஓரம்கட்டப்பட்டுள்ளனர். இஸ்லாமியர்கள் யாரும் குழுவில் இடம்பெறவில்லை என்று சொல்லப்பட்ட நிலையில், ஒருவருடைய பெயர் மட்டுமே உள்ளது. அதிமுக, பாஜக கூட்டணிக்கு விஜய் செல்லக்கூடும் என தகவல் பரவி வரும் நிலையில், தவெகவுக்கு புதிய தலைவலி ஏற்பட்டுள்ளது.
இன்றைய காலகட்டத்தில் வாலிபர்கள் விபரீத விளையாட்டுகளில் ஈடுபட்டு ஆபத்தில் சிக்கி கொள்கின்றனர். அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் நடந்த ஒரு…
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அனைத்து…
தேவர் குருபூஜையை ஒட்டி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, காளையார் கோவில், திருப்பத்தூர், இளையான்குடி, தேவக்கோட்டை ஆகிய…
உத்திரபிரதேசம் ஹபீஸ்கஞ்ச் காவல் நிலையப் பகுதியில் உள்ள கமுவா கிராமத்தைச் சேர்ந்த அனில், கடந்த நவம்பரில் அனிதாவை காதல் திருமணம்…
கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த அப்துல் அதே பகுதியில் ஆட்டோ ஸ்பேர் பார்ட்ஸ் கடை நடத்தி வருகிறார். கடந்த…
பள்ளிக்குச் செல்வது பல குழந்தைகளை அடிக்கடி பயமுறுத்துகிறது. அவர்களுக்குப் பள்ளிக்குச் செல்வது ஒரு கனவுதான். படிப்பு என்றாலே அவர்களுக்கு பாட்டியின்…