“அப்பா எங்களோட தான் இருக்காரு!”… கிளினிக்கில் இருந்து வந்த துர்நாற்றம்… 4 ஆண்டுகளாக தந்தை உடலை ஏசியில் வைத்திருந்த மகள்… மும்பையை உலுக்கிய பகீர் சம்பவம்…!!

Spread the love

மும்பை மலாடு பகுதியில் மூடிக்கிடந்த ஒரு கிளினிக்கில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசியதை அடுத்து, அக்கம் பக்கத்தினர் காவல் துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், மூடியிருந்த இரும்புக் கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, அங்குள்ள ஒரு குளிர்சாதன அறையில் முதியவர் ஒருவரின் சடலம் இருப்பதைக் கண்டுபிடித்தனர்.

காவல்துறையினரின் விசாரணையில், மீட்கப்பட்ட உடல் கடந்த 2022-ஆம் ஆண்டு மாரடைப்பால் உயிரிழந்த 80 வயது முதியவருடையது என்பது தெரியவந்தது. தந்தையின் மீது கொண்ட அதீத பாசத்தின் காரணமாக, அவரது உடலைத் தகனம் செய்யாமல் தனியார் கிளினிக் உதவியுடன் அவரது மகளும் மனைவியும் பாதுகாத்து வந்துள்ளனர். இறந்த உடல்களை மிகக் குறைந்த வெப்பநிலையில் பாதுகாக்கும் ‘கிரையோனிக்ஸ்’ தொழில்நுட்பம் மூலம் அந்த உடலை அமெரிக்காவிற்கு அனுப்ப அவர்கள் திட்டமிட்டு, அதற்கான சட்ட ஆலோசனைகளையும் அமெரிக்க நிறுவனங்களிடம் பெற்று வந்துள்ளனர்.

சமீபத்தில் ஒரு மாதமாக இந்த கிளினிக் சீரமைப்பு பணிகளுக்காக மூடப்பட்டிருந்த நிலையில்தான், பராமரிப்பு இல்லாததால் உடலிலிருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது. கிளினிக் உரிமையாளருக்கோ அல்லது உள்ளூர் காவல் நிலையத்திற்கோ சடலம் அங்கு வைக்கப்பட்டிருப்பது குறித்து எந்தவொரு தகவலும் முன்னதாகத் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும், முதியவர் இயற்கையாகவே மரணமடைந்ததற்கான அதிகாரப்பூர்வ சான்றிதழை அவரது குடும்பத்தினர் சமர்ப்பித்ததால், காவல்துறையினர் இந்த விவகாரத்தில் எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை.

Gayathri

Recent Posts

அடே… திமுகவை சொன்னா இபிஎஸ்-க்கு எதுக்கு கோவம் வருது?… ஒரே வார்த்தையில் எடப்பாடியை காலி செய்த… விஜய்யின் அதிரடி டயலாக்… அரசியலில் பரபரப்பு…!!

விஜய் மேற்கொண்டுள்ள இந்த அதிரடிப் பிரச்சாரம் தமிழக அரசியலில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாராபுரம் தொகுதி தவெக வேட்பாளர் சத்யபாமாவை…

3 minutes ago

கள்ளக்காதல் காரணமா?.. தாய்க்கும் தொடர்பா?… கோயம்பேட்டில் 9 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்… அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சித் தகவல்கள்…!!

சென்னை கோயம்பேடு நியூ காலனி பகுதியில் வசித்து வரும் பூங்கொடி என்பவரின் 9 வயது மகன் தருண் மர்மமான முறையில்…

9 மணத்தியாலங்கள் ago

நடுவானில் பயங்கரம்…! கேப்டனுக்கு கத்திக்குத்து… 17,000 அடியில் விமானம் தடுமாறியதால் அலறிய பயணிகள்… பெரும் பரபரப்பு சம்பவம்…!!

துபாயிலிருந்து இஸ்ரேலின் டெல்-அவிவ் நகருக்குச் சென்று கொண்டிருந்த ஃப்ளைதுபாய் விமானத்தில், ஓமன் நாட்டை சேர்ந்த துணை விமானி திடீரென இந்திய…

9 மணத்தியாலங்கள் ago

இனி தப்பவே முடியாது?… ரூ.100 கோடி மோசடி வழக்கு… அன்பில் மகேஸுக்கு இடைக்கால நிவாரணம் மறுப்பு… மனுவை நிராகரித்த நீதிமன்றம்…!!

தனியார் பள்ளிகளுக்குத் தேவையான நிரந்தர அங்கீகாரம் மற்றும் கட்டட அனுமதிகளைப் பெற்றுத் தருவதாக உறுதியளித்து, நூறு கோடி ரூபாய்க்கும் மேல்…

9 மணத்தியாலங்கள் ago

ஐயோ… கள்ளக்காதலனுடன் தகராறு… ஆத்திரத்தில் 9 வயது சிறுவனின்… கழுத்தை நெரித்துக் கொன்ற போதை ஆசாமி… கோயம்பேட்டில் நடந்த பகீர் சம்பவம்…!

சென்னை கோயம்பேடு நியூ காலனியைச் சேர்ந்த தீபக் - பூவரசி தம்பதியினர் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழ்ந்து வந்த…

9 மணத்தியாலங்கள் ago