2008-ம் ஆண்டு நிலவிய உலகளாவிய பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு, தங்கம் தனது மிகப்பெரிய மாதாந்திர வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இந்த ஒரே மாதத்தில் மட்டும் சுமார் 13 சதவீதத்திற்கும் மேலாக விலை சரிந்துள்ளதால், இது முதலீட்டாளர்கள் மத்தியில் ஒரு ‘கறுப்பு மாதமாக’ பார்க்கப்படுகிறது. இதற்கு முக்கியக் காரணமாக, மத்திய கிழக்கு போர்ச் சூழலில் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான புகலிடமாகத் தங்கத்தை விட அமெரிக்க டாலரையே அதிகம் தேர்ந்தெடுத்தது அமைகிறது. ஏப்ரல் மாதம் இதைவிட அதிகமாக சந்திக்கும் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன. டாலரின் மதிப்பு வலுவடைந்ததால் தங்கத்தின் மீதான ஈர்ப்பு குறைந்து, அதன் மவுசு சர்வதேச சந்தையில் சரிவைக் கண்டுள்ளது.
மறுபுறம், கச்சா எண்ணெய் விலை உயர்வால் ஏற்படக்கூடிய பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வங்கிகள் வட்டி விகிதத்தை உயர்த்தக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. தங்கம் என்பது வட்டி தராத முதலீடு என்பதால், வட்டி விகிதம் உயரும்போது முதலீட்டாளர்கள் தங்கள் கவனத்தை பாண்டுகள் (Bonds) பக்கம் திருப்புகின்றனர். இது தங்கம் மட்டுமின்றி வெள்ளி, பிளாட்டினம் மற்றும் பல்லேடியம் போன்ற பிற உலோகங்களின் விலையிலும் சுமார் 20% வரை சரிவை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா ஒரு எரிசக்தி ஏற்றுமதி நாடாக இருப்பதும், எண்ணெய் விலை உயர்வு அந்நாட்டு டாலரை மேலும் வலுப்படுத்தியதும் தங்கத்தின் மீதான அழுத்தத்தை அதிகரித்துள்ளன.
இருப்பினும், இந்த விலை வீழ்ச்சியை ஒரு நல்வாய்ப்பாகப் கருதி முதலீட்டாளர்கள் மீண்டும் சந்தைக்குள் நுழைந்து வருவதால் தங்கம் மெல்ல மீண்டு வருகிறது. கச்சா எண்ணெய் விநியோகச் சிக்கல்கள் தீரும் வரை சந்தையில் இந்த ஊசலாட்டம் தொடரும் என்று நிபுணர்கள் எச்சரித்தாலும், நீண்ட கால அடிப்படையில் தங்கம் மீண்டும் ஜொலிக்கும் என்றே கணிக்கப்படுகிறது. குறிப்பாக, கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் 2026-ம் ஆண்டின் இறுதியில் ஒரு அவுன்ஸ் தங்கம் $5,400 வரை உயர வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது. மத்திய வங்கிகளின் தொடர் தங்கம் கொள்முதல் மற்றும் எதிர்கால வட்டிக்குறைப்புகள் தங்கத்தின் விலையை மீண்டும் உச்சத்திற்குக் கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூருவில் இருந்து துமாகுருக்கு காரில் சென்றபோது, பெண்ணை அவருடன் வந்த நபர் கத்தியால் குத்திய நிலையில், காரை வெடிக்கச் செய்து…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற்று, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் முதலமைச்சர் விஜய் தலைமையில் புதிய அரசு பதவியேற்றுள்ளது. ஆட்சி…
தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் அடையாள அட்டைகளில் இனிமேல் சாதிப் பெயர் இடம் பெறாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அதிரடியாக…
நடிகை சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி, திரையரங்குகளில் வசூல் சாதனை படைத்து வரும் திரைப்படம் 'மா இன்டி பங்காரம்'. சமந்தாவின்…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு குரங்கின் வீடியோ, பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு எப்படி முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்ற…
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு மாமியார், பெங்களூருவில் வசிக்கும் தனது மருமகளுக்கு மிகவும் பிரசித்தி பெற்ற மற்றும் அவருக்குப் பிடித்தமான…