சென்னை நங்கநல்லூரில் ‘Sree Sai Silks’ என்ற பெயரில் துணிக்கடை நடத்தி வந்த பிரபல தொழிலதிபர் நாகலட்சுமி (41), தனது கணவராலேயே வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கன்னியாகுமரியைச் சேர்ந்த நாகலட்சுமி, சென்னை மீது கொண்ட ஈர்ப்பால் சுப்பிரமணி என்பவரை திருமணம் செய்து இங்கு குடியேறினார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்; மூத்த மகன் ரஷ்யாவிலும், இளைய மகன் மதுரவாயலிலும் மருத்துவம் பயின்று வருகின்றனர். இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் மூலம் ‘Ready to Wear’ சேலைகளை பிரபலப்படுத்திய நாகலட்சுமி, திரையுலக பிரபலங்கள் முதல் சாமானிய மக்கள் வரை அனைவரையும் தனது வாடிக்கையாளர்களாகக் கொண்டிருந்தார்.
நாகலட்சுமியின் அபரிமிதமான வளர்ச்சியே அவருக்கு எமனாக மாறியது என்பதுதான் இந்தச் சோகத்தின் உச்சம். வேலை ஏதுமின்றி சுற்றித்திரிந்த கணவர் சுப்பிரமணிக்கு, நாகலட்சுமி ஹோட்டல் பிசினஸ் வைத்துக் கொடுத்தும் அதை அவர் நஷ்டத்தில் முடித்தார். சமூக வலைதளங்களில் மனைவி பிரபலமடைவதும், தன்னைவிட அவர் அதிகமாகச் சம்பாதிப்பதும் சுப்பிரமணிக்கு கடும் தாழ்வு மனப்பான்மையையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது. இதனால் கணவன் – மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
சம்பவத்தன்று நங்கநல்லூர் வீட்டிற்கு வந்த சுப்பிரமணி, நாகலட்சுமியுடன் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது கோபமடைந்த நாகலட்சுமி, சுப்பிரமணியை ஊருக்கே திரும்பிச் செல்லுமாறு கூறியுள்ளார். இதனால் ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற சுப்பிரமணி, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் நாகலட்சுமியை கொடூரமாக வெட்டிக் கொலை செய்தார். பின்னர், தானும் அதே இடத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மகன்களை மருத்துவர்களாக்க கடுமையாக உழைத்த ஒரு தாய், தன் கணவரின் வன்மத்திற்கு பலியான செய்தி அப்பகுதி மக்களை நிலைகுலையச் செய்துள்ளது.
நாகலட்சுமியின் மறைவு அவரது வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல் நாளிலேயே 2 லட்சம் ரூபாய் லாபம் ஈட்டும் அளவுக்குத் தனது தொழிலை வளர்த்த அவர், பலருக்கு வேலைவாய்ப்புகளையும் வழங்கியுள்ளார். வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பேசுவது, குறைந்த லாபத்தில் தரமான சேலைகளை வழங்குவது எனத் தனி முத்திரை பதித்த ஒரு பெண் ஆளுமை, வெறும் ‘ஈகோ’ காரணமாகச் சிதைக்கப்பட்டது வேதனைக்குரியது. தற்போது ரஷ்யாவிலிருந்து மூத்த மகன் வந்த பிறகு, இருவரின் உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளன.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…
சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…
அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…
சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…
மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…
இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…