Categories: சினிமா

பாரதிராஜாவின் ‘மண்வாசனை’ திரைப்படத்தில் நடிக்க மறுத்த ஷோபனா… அதற்கு அவர் சொன்ன காரணம் என்ன தெரியுமா?

Spread the love

தமிழ் சினிமாவின் போக்கை மாற்றிய ஒரு சில இயக்குனர்களில் பாரதிராஜாவும் ஒருவர். அவர் இயக்கத்தில் வெளியான 16 வயதினிலே திரைப்படம் தமிழ் சினிமாவையே புரட்டி போட்டது. தொடர்ந்து ரத்தமும் சதையுமான கிராமிய மணம் கொண்ட படங்களை கொடுத்து தமிழ் சினிமா ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்டார்.

அவர் தன்னை ஒரு இயக்குனராக நிலைநிறுத்திக் கொண்ட பின்னரும் தனது படங்களுக்கு முன்னணி நடிகர்களை தேடி செல்லாமல் புதுமுக நடிகர்களையே பெரும்பாலும் பயன்படுத்தினார்.  அதுமட்டுமில்லாமல அவர்களை நட்சத்திரங்களாக உருவாக்கினார். அதற்குக் காரணம் முன்னணி நடிகர்களை போட்டால் அவர்களை வைத்து நாம் எடுக்க நினைத்ததை எடுக்க முடியாது என அவர் நம்பியதே அதற்கு காரணம். அவர் அறிமுகப்படுத்திய ராதா, ரேவதி, ராதிகா, ரேகா உள்ளிட்ட நடிகைகள் தமிழ் சினிமாவில் திறமையான நடிகைகள் என பெயரெடுத்தனர்.

அப்படி அவர் இயக்கி மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்களில் ஒன்றுதான் மண்வாசனை. பாண்டியன், ரேவதி மற்றும் காந்திமதி ஆகியோர் நடிப்பில் உருவான இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தவர்களே வேறு நடிகர்கள்தானாம். பாண்டியன் வேடத்தில் சிவகுமார் நடிக்க இருந்து பின்னர் அவர் வேண்டாம் என புதுமுகத்தைத் தேடினாராம் சிவகுமார். அதே போல ரேவதி நடித்த கதாபாத்திரத்துக்கு முதலில் பத்மினியின் உறவினரான ஷோபனாவைதான் தேர்வு செய்து வைத்திருந்தாராம்.

முதலில் நடிக்க ஒப்புக்கொண்ட ஷோபனா, பின்னர் படத்தில் நடித்தால் தன்னுடைய பள்ளிப்படிப்பு கெடும் என கூறி அந்த வாய்ப்பை மறுத்தாராம். இதனால்தான் பாரதிராஜா ரேவதியை தேர்வு செய்தாராம். ஆனால் ரேவதியும் அப்போது பள்ளியில்தான் படித்துக் கொண்டிருந்தாராம். மண்வாசனை திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அதைப் பார்த்து ஷோபனா கொஞ்சம் வருத்தமடைந்திருப்பார்தான்.

ஆனால் அவரும் அதன் பின்னர் மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி அதன் பின்னர் தமிழ் சினிமாவுக்கு வந்து முன்னணி நடிகையானார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் பாரதிராஜா இயக்கத்தில் மட்டும் அவர் அதன் பிறகு நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தன் படத்தை ஷோபனா வேண்டாம் என்று சொன்ன கோபம் பாரதிராஜாவுக்கு இல்லாமலா இருந்திருக்கும்.

vinoth

Recent Posts

ஜனநாயகம் லீக் விவகாரம்… “இவங்க தான் காரணம்… விஜய்க்கு சம்மந்தம் இல்லை”… சனம் ஷெட்டி போட்டு உடைத்த ரகசியம்…!!!

நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் கசிந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

19 seconds ago

“அண்ணன் சொல்லிட்டாரு.. தங்கச்சி முடிச்சுட்டாங்க”… நாடாளுமன்றத்தில் திமுகவின் ‘தர்மயுத்தம்’ ஆரம்பம்… ஸ்டாலின் எடுத்த விஸ்வரூபம்…!

மத்திய அரசு கொண்டு வர உள்ள தொகுதி மறுவரையறை உள்ளிட்ட மூன்று முக்கிய திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக…

7 minutes ago

“விஜய்யின் காலில் விழுந்து கதறினேன்.. எல்லாவற்றிற்கும் இவர்தான் காரணம்”…. திமுகவில் இணைந்த அஜிதா ஆக்னல் பரபரப்பு புகார்…!

தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகியாக இருந்த அஜிதா ஆக்னல், அக்கட்சியிலிருந்து விலகி அண்மையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…

14 minutes ago

பகீர்!… சொந்தப் பேத்தியையே சீரழித்த தாத்தா!… காமவெறி முதியவருக்கு 61 ஆண்டு சிறை தண்டனை… சிவகங்கை நீதிமன்றம் வழங்கிய அதிரடித் தீர்ப்பு…!!!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 68 வயது முதியவர் ராஜூ, கடந்த 2021-ஆம் ஆண்டு…

16 minutes ago

BIG BREAKING: ‘ஜனநாயகன்’ திரைப்படம்…. சற்றுமுன் கோர்ட் அதிரடி உத்தரவு.. விஜய்க்கு மகிழ்ச்சி…!

சட்டவிரோதமாக இணையதளங்களில் கசிந்த 'ஜன நாயகன்' திரைப்படம், சில உள்ளூர் கேபிள் டிவி சேனல்களிலும் அனுமதியின்றி ஒளிபரப்பப்பட்ட சம்பவம் பெரும்…

26 minutes ago

இந்தியாவுக்கு பலத்த அடி!… “இனி ஒரு சொட்டு கூட கிடையாது”… ரஷ்யா, ஈரானுக்கு அமெரிக்கா போட்ட ரெட் கார்டு… கதிகலங்கிய உலக நாடுகள்…!!!

மேற்கு ஆசியாவில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகச் சங்கிலியில் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஈரானை…

32 minutes ago