சுடிதார் அணிந்து வந்த தலைமை ஆசிரியை… பள்ளிக்குள் நுழைய அனுமதி மறுப்பு… பள்ளி மேலாளரின் அடாவடியால் ஆசிரியை வாசலில் அமர்ந்து போராட்டம்…!!

Spread the love

கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில், சுடிதார் அணிந்து வந்த தலைமை ஆசிரியைக்கு பள்ளிக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த புதன்கிழமை காலை 9 மணியளவில் பள்ளிக்கு வந்த தலைமை ஆசிரியையை, பள்ளி மேலாளரின் உத்தரவின் பேரில் பாதுகாப்பு ஊழியர்கள் வாயிலிலேயே தடுத்து நிறுத்தினர். பெண் ஆசிரியர்கள் பள்ளிக்கு சுடிதார் அணிந்து வரக்கூடாது என்ற மேலாளரின் வாய்மொழி உத்தரவை மீறியதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பள்ளிக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதால், மதிய உணவிற்காக மாணவர்களுக்குக் கொண்டு வரப்பட்ட முட்டை தட்டுடன் தலைமை ஆசிரியை பள்ளி வாசலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இக்காட்சிகள் தொலைக்காட்சி ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர், தகவலறிந்து வந்த கொட்டாரக்கரா காவல்துறையினரின் தலையீட்டிற்குப் பிறகே அவர் பள்ளிக்குள் அனுமதிக்கப்பட்டார். ஆசிரியர்களின் உடை சுதந்திரம் குறித்துப் பல்வேறு விவாதங்களை இச்சம்பவம் கிளப்பியுள்ளது.

Soundarya

Recent Posts

” அறங்காவலர்களை ஒதுக்கிவிட்டு அராஜகம்…” திருப்பணிகளை செய்தது திமுக அரசுதான்… மதுரை மீனாட்சியம்மன் கும்பாபிஷேகக் குளறுபடியில் கொந்தளித்த பிடிஆர்…!!!

வரலாற்றுச் சிறப்புமிக்க மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான குளறுபடிகள், விஐபி கலாச்சாரம் மற்றும் பக்தர்கள்…

6 minutes ago

“10 நிமிஷத்துல உள்ள விடலைனா கேட்டை உடைப்போம்…” மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் பெண் பக்தர்கள் கொந்தளிப்பு…!!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மிக விமரிசையாகக் கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், தவெக அரசின் மோசமான…

24 minutes ago

“உள்ளே வராதீங்க… என்ன செஞ்சீங்க..?” மதுராந்தகம் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு கடும் எதிர்ப்பு…! பிரச்சாரத்தில் திடீர் பரபரப்பு…!!

மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் மரகதம் குமரவேல், வீராணக்குன்னம் கிராமப் பகுதியில் தீவிர வாக்கு…

33 minutes ago