இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ஒரு படத்தில் அதிதி சங்கர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்ற பட்டத்துடன் வலம் வருபவர் இயக்குனர் சங்கர். ஒரு திரைப்படத்திற்கு மற்றொரு திரைப்படம் ஒரு படி மேலே இருக்க வேண்டும் என்று ஆசை படக்கூடிய இவர் அதை நிகழ்த்தியும் காட்டி இருக்கின்றார். இவர் இயக்கத்தில் வெளிவந்த ஜென்டில்மேன், காதலன், ஜீன்ஸ், இந்தியன், எந்திரன், ஐ, 2.0 , நண்பன் உள்ளிட்ட பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளார்.

இவர் இயக்கத்தில் தற்போது வெளியான இந்தியன் 2 திரைப்படம் மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது. இதைத்தொடர்ந்து தெலுங்கில் ராம் சரண் அவர்களை வைத்து கேம் சேஞ்சர் என்ற திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இந்த திரைப்படத்தின் மீது ஏகப்பட்ட நம்பிக்கையை வைத்திருக்கின்றார்.
இவரின் குடும்ப வாழ்க்கையை பொருத்தவரையில் இவருக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன் இருக்கின்றார். இவரின் 2-வது மகள் அதிதி ஷங்கர் வெளிநாட்டில் டாக்டர் படிப்பை முடித்துவிட்டு சினிமாவில் நடிக்க தொடங்கி இருக்கின்றார். கார்த்திக் நடிப்பில் வெளியான விருமன் என்ற திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமான இவர் அடுத்ததாக மாவீரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடித்திருந்தார்.

தற்போது இரண்டு மூன்று திரைப்படங்களை தனது கையில் வைத்திருக்கும் இவர் விரைவில் தந்தை இயக்கத்தில் நடிக்க இருக்கின்றாராம். இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் பேசியிருந்த சங்கர், அதிதி சங்கரை உங்கள் திரைப்படத்தில் பார்க்கலாமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த சங்கர் அவருக்கு என ஒரு கதாபாத்திரம் ரெடியாக இருக்கின்றது.
நான் அவரை ஒரு தந்தையாக இல்லாமல் இயக்குனராக பார்த்தபோது அவரிடம் ஒரு சிறந்த நடிகைக்கான அம்சங்கள் இருக்கின்றது என்பதை அறிந்தேன். ஆகையால் விரைவில் என்னுடைய திரைப்படத்தில் அவரை நீங்கள் பார்க்கலாம் என்று தெரிவித்திருக்கின்றார். இதை கேட்ட ரசிகர்கள் பலரும் மிகுந்த குஷியில் இருக்கிறார்கள்.
