Categories: சினிமா

அன்று சங்கர் பட ஹீரோயின், இன்று போட்டோகிராபர்.. முன்னணி ஹீரோயினியாக இருந்த சதா கடந்து வந்த பாதை..!

Spread the love

கடந்த 2002 ஆம் ஆண்டு தெலுங்கில் இயக்குனர் தேஜா தயாரித்து இயக்கிய ஜெயம் படத்தில் ஹீரோயினியாக அறிமுகமானவர்தான் நடிகை சதா. தெலுங்கில் இவருக்கு ஜோடியாக நடிகர் நிதின் நடித்திருந்தார். இந்தப் படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான ஃபிலிம் பேர் விருது உள்ளிட்ட சில விருதுகள் இவருக்கு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து தெலுங்கில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த சதாவுக்கு தமிழில் நடிகர் ஜெயம் ரவி ஹீரோவாக அறிமுகமான ஜெயம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தெலுங்கில் எப்படி ஜெயம் படத்தில் ஹீரோயினியாக நடித்த ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டாரோ அதனைப் போலவே தமிழ் ரசிகர்கள் மனதையும் கவர்ந்து விட்டார். பிறகு தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளில் பிசியாக நடிக்க தொடங்கினார்.

குறிப்பாக தமிழில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போடும் வாய்ப்புகள் இவருக்கு கிடைத்த நிலையில் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த அந்நியன் திரைப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்தப் படம் சாதனை முன்னணி நாயகியாக உயர்த்தியது. இந்த படத்திற்கு முன்பாகவே ரஜினியின் சந்திரமுகி திரைப்படத்தில் மாளவிகா கதாபாத்திரத்தில் நடிக்க சதாவை அணுகிய நிலையில் நடித்தால் தான் ஹீரோயினியாக தான் நடிப்பேன் என்று கூறிவிட்டு ரஜினியின் படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்து விட்டார்.

இதனைத் தொடர்ந்து மாதவனுக்கு ஜோடியாக எதிரி, பிரியசகி, அஜித்துடன் திருப்பதி, வினய் உடன் சேர்ந்து உன்னாலே உன்னாலே போன்ற பல திரைப்படங்களில் நடித்தார். இவர் இறுதியாக அறிமுக நடிகர் வினய் உடன் இணைந்து உன்னாலே உன்னாலே திரைப்படத்தில் நடித்த நிலையில் இந்தத் திரைப்படமே இவருக்கு இறுதி படமாக அமைந்தது என்று கூற வேண்டும். கமர்சியல் ஹீரோயினியாக வளம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அறிமுக நடிகருடன் நடித்து தனக்கான வாய்ப்பை தானே கெடுத்துக் கொண்டார். அதன் பிறகு இயக்குனர் அப்துல் மஜீத் என்பவர் இயக்கத்தில் நடித்த டார்ச் லைட் படத்தில் சதா விலைமாது கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில் கலவையான விமர்சனங்களை பெற்றார்.

பிறகு பல நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்ற அவர் ஒரு கட்டத்தில் வடிவேலுவுடன் இணைந்து எலி திரைப்படத்தில் நடித்தார். ஒரு காமெடி நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் அளவுக்கு வந்து விட்டாரே என்ற விமர்சனம் எழுந்த நிலையில் நான் ஒரு ஹீரோவுக்கு ஜோடியாக ஹீரோயினியாக தான் நடிக்கிறேன் என்று கூறி பதிலடி கொடுத்தார். இப்படி சினிமா வாய்ப்புகளை தானே கெடுத்துக் கொண்ட சதா தற்போது சினிமாவில் இருந்து விலகி wildlife photographer ஆக தற்போது மாறி காட்டுக்குள் சென்று புகைப்படங்கள் எடுப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

Nanthini

Recent Posts

தவெகவிலிருந்து விலகும் மனநிலையில் செங்கோட்டையன்…? ரகசியத்தை உடைத்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்..!!

அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன் கட்சியிலிருந்து விலகும் மனநிலையில் இருப்பதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ள…

51 minutes ago

குடிமகனாக மாறிய கெவின் பீட்டர்சன்? மதுக்கடையில் கேமரா முன்னிலையில் செய்த காரியம்… பதறிய ரசிகர்கள்… இறுதியில் காத்திருந்த ‘ட்விஸ்ட்’… இணையத்தை அதிரவைக்கும் வீடியோ…!!!

இ ங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன், குருகிராமில் உள்ள மதுக்கடை ஒன்றில் தனது சொந்த…

1 மணத்தியாலம் ago

காட்டில் ஒரு அதிசயம்!… பிறந்த ஒரே நாளில் இணையத்தை ஆக்கிரமித்த குட்டி காண்டாமிருகம்… வைரலாக கியூட் வீடியோ…!!!

இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்த, ஒரு நாள் மட்டுமே ஆன காண்டாமிருகக் குட்டியின் நெகிழ்ச்சியான காணொளி இணையத்தில்…

1 மணத்தியாலம் ago

8-ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ரூ. 50,000 வைப்பு நிதி… தமிழக பாஜக தேர்தல் அறிக்கையில் அதிரடி வாக்குறுதி..!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்காக…

2 மணத்தியாலங்கள் ago

கேரள விடுதியில் பயங்கரம்!… பெண் பயணியை முறைத்துப் பார்த்து உரிமையாளர் செய்த காமவெறிச் செயல்… வைரலாகும் ‘பகீர்’ வீடியோ…!!!

கேரளாவில் உள்ள 'ஹாஸ்டல் எக்ஸ்ப்' (Hostel Exp) என்ற விடுதியில் தங்கியிருந்த பயணப் பதிவர் அபிமன்யு நந்தல், அங்கு தனக்கு…

2 மணத்தியாலங்கள் ago

“நான் ஒரு அரசு ஊழியர், கைநிறைய சம்பளம் வாங்குறேன்” குடிபோதையில் டிராஃபிக் ஜாமில் காரை நிறுத்தி போலீசாருடன் மல்லுக்கட்டிய பெண்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…

2 மணத்தியாலங்கள் ago