சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மாந்திரீக பரிகார நிலையம் நடத்தி வந்த போலி சாமியார் ஒருவர், பரிகார பூஜைக்கு வந்த பெண்கள் மற்றும் பள்ளிச் சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வீடியோ பதிவு செய்து வைத்திருந்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இச்சம்பவத்தில் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்தப் போலி சாமியாரைப் பிடித்துத் தர்மஅடி கொடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர். இக்கொடூரச் சம்பவம் சேலம் மாவட்டம் முழுவதிலும் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
வாழப்பாடி அருகேயுள்ள வெள்ளாளகுண்டம் பகுதியைச் சேர்ந்த விஜயராஜா (50) என்பவர், ஆரம்பத்தில் ஃபிரிட்ஜ், மிக்ஸி போன்ற வீட்டு உபயோகப் பொருட்களை பழுதுபார்க்கும் தொழில் செய்து வந்துள்ளார். பின்னர் திடீரென ஆன்மீக வேடமிட்டு, ‘சனீஸ்வர பரிகார நிலையம்’ என்ற பெயரில் மாந்திரீகத் தொழில் தொடங்கி நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு நன்கொடை வசூலிக்கச் சென்ற பள்ளிச் சிறுமி ஒருவரிடம் விஜயராஜா பாலியல் ரீதியாக அத்துமீற முயன்றுள்ளார். அச்சிறுமி அங்கிருந்து தப்பித்துத் தன் தோழியிடம் கூறியபோது, அந்தச் சாமியார் ஏற்கனவே தனக்கும் இதேபோலத் தொல்லை கொடுத்ததாகத் தெரிவித்துள்ளார். இதையறிந்து கொதிப்படைந்த பெற்றோரும் ஊர் இளைஞர்களும் விஜயராஜாவின் நிலையத்திற்குச் சென்ற நிலையில், விவகாரம் வெளியே தெரிந்ததை உணர்ந்த அவர் நிலையத்தைப் பூட்டிவிட்டுத் தப்பியோடிவிட்டார்.
தலைமறைவான போலி சாமியாரைத் தேடும் பொருட்டு ஆத்திரமடைந்த பொதுமக்கள் மாந்திரீக நிலையத்தின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு பள்ளி மாணவிகளின் சீருடைகள் மற்றும் பெண்களின் ஆடைகள் அலங்கோலமாகச் சிதறிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும் அங்கிருந்த மடிக்கணினியை எடுத்து ஆய்வு செய்தபோது, விஜயராஜா பள்ளிச் சிறுமிகள் மற்றும் பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தொடர்பான 50-க்கும் மேற்பட்ட கொடூர வீடியோக்கள் இருந்தது தெரியவந்தது. இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற கிராம மக்கள், தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தி அப்பகுதியில் பதுங்கியிருந்த விஜயராஜாவைச் சுற்றிவளைத்துப் பிடித்துச் சரமாரியாகத் தர்மஅடி கொடுத்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வாழப்பாடி டி.எஸ்.பி சபரிநாதன் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான போலீசார், விஜயராஜாவை பொதுமக்களிடமிருந்து மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பரிகார பூஜைக்கு வந்த பெண்களுக்கு மயக்க மருந்து கலந்த பானங்களைக் கொடுத்து, அவர்கள் மயங்கிய நிலையில் இத்தகைய வக்கிர செயல்களில் ஈடுபட்டு வீடியோ எடுத்து மிரட்டி வந்தாரா என்ற கோணத்தில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. பள்ளிச் சீருடைகளுடன் ஆபாச வீடியோக்கள் சிக்கிய இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள ஒரு பரபரப்பான சந்தைப் பகுதியில், கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாகப் பாய்ந்து வந்த கார் ஒன்று…
குஜராத் மாநிலத்தில் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த 35 வயது இளைஞரின் உறுப்புகளைத் தானம் செய்ய அவரது மனைவி முன்வந்ததன்…
உத்தராகண்ட் மாநிலத்தில் கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் இனோவா கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர்…