“18 வயது ஆனதும் கல்யாணம் பண்ணி வைக்கணும்…” ஆபாச படம் எடுத்த சிறுவன்… ஒரு வருடமாக 16 வயது சிறுமிக்கு பாலியல் கொடூரம்… பஞ்சாயத்து சர்ச்சை தீர்ப்பு… பகீர் சம்பவம்…!!

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி மாவட்டம் ஷீஷ்கர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை, அதே கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் ஆபாசமாகப் புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டு, அதைச் சமூக வலைதளங்களில் லீக் செய்து விடுவதாக மிரட்டி சுமார் ஒரு வருட காலமாகத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளான். அச்சத்தால் முடங்கிக் கிடந்த அந்தச் சிறுமியிடம் குடும்பத்தினர் விசாரித்த போதுதான் தனக்கு நேர்ந்த கொடூரத்தைச் சிறுமி கண்ணீருடன் கூறியுள்ளார்.

சிறுமியின் பெற்றோர் இது குறித்து நியாயம் கேட்கக் குற்றம் சாட்டப்பட்ட சிறுவனின் வீட்டிற்குச் சென்றபோது, அவர்களுக்குக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் ஷீஷ்கர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலிஸார் வழக்கப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கிய நிலையில், இந்த விவகாரத்தை மறைப்பதற்காகக் கிராம பஞ்சாயத்துக் கூட்டப்பட்டுள்ளது. அதில், சட்டப்பூர்வ நடவடிக்கையைக் கைவிட்டு, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 18 வயது நிறைவடைந்ததும், அவளைச் சீரழித்த சிறுவனுக்கே திருமணம் செய்து வைக்க வேண்டும் எனப் பஞ்சாயத்து பெரிய மனிதர்கள் கட்ட பஞ்சாயத்து செய்து நிச்சயதார்த்த சடங்குகளையும் நடத்தியுள்ளனர்.

போக்சோ சட்டத்தின் கீழ் வரும் கொடூரக் குற்றத்தைச் சமரசம் செய்து மூட முயன்ற பஞ்சாயத்தின் முடிவை அதிரடியாகத் நிராகரித்த போலிஸார், வழக்கை சட்டப்படி தீவிரப்படுத்தியுள்ளனர். பரேலி காவல்துறை அதிகாரி அருண் குமார் சிங் தலைமையில் போலிஸார் குற்றம் சாட்டப்பட்ட சிறுவனைக் காவலில் எடுத்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலிஸார், இந்த விவகாரத்தில் பஞ்சாயத்தின் சட்டவிரோதத் தலையீடு குறித்தும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

7 மணத்தியாலங்கள் ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

7 மணத்தியாலங்கள் ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

7 மணத்தியாலங்கள் ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

7 மணத்தியாலங்கள் ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

7 மணத்தியாலங்கள் ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

8 மணத்தியாலங்கள் ago