“வீடியோ இருக்கு, வெளியிடுவேன்”… எமனான இன்ஸ்டா..காதலித்து கழுத்தறுத்த காதலன்…. 17 வயது சிறுமியை அடுத்தடுத்து சீரழித்த 3 பேர்…..!

Spread the love

கன்னியாகுமரி மாவட்டத்தில் 17 வயது பள்ளிச் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், சமூக வலைதள நண்பர், உறவினர் உட்பட 4 பேரை குளச்சல் அனைத்து மகளிர் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்த பிளஸ்-2 மாணவி, ஒரு வாரத்திற்குப் பிறகு வீடு திரும்பிய நிலையில், பெற்றோர் அளித்த புகாரின் பேரில் இந்த அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான 20 வயது இளைஞர் ஒருவருடன் சிறுமி பழகி வந்துள்ளார். காதலிப்பதாகக் கூறி சிறுமியுடன் தனியாக இருந்த தருணங்களை அவர் இரகசியமாகப் பதிவு செய்துள்ளார். பின்னர், அந்தப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி, அச்சிறுமியைப் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து சிறுமி தனது உறவினரான இளைஞரிடம் உதவி கேட்டுள்ளார். ஆனால், அவருக்கு உதவுவதற்குப் பதிலாக அந்த நபரும் சிறுமியை மிரட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இச்சம்பவத்தை அறிந்த உறவினரின் நண்பர், பிரச்சினையைத் தீர்த்து வைப்பதாகக் கூறி சிறுமியை அழைத்துச் சென்று, தனது மற்றொரு நண்பருடன் சேர்ந்து மீண்டும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளார்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாகப் போக்சோ உட்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார், தீவிரத் தேடுதலுக்குப் பின் இருவரை உள்ளூரிலும், தலைமறைவாக இருந்த மற்ற இருவரை செல்போன் இருப்பிடத்தைக் கொண்டு சென்னையிலும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பெற்றோர் தங்கள் குழந்தைகளின் சமூக வலைதளப் பயன்பாட்டைக் கவனமாகக் கண்காணிக்க வேண்டும் என காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Nanthini

Recent Posts

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

4 மணத்தியாலங்கள் ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

4 மணத்தியாலங்கள் ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

4 மணத்தியாலங்கள் ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

4 மணத்தியாலங்கள் ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

5 மணத்தியாலங்கள் ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

5 மணத்தியாலங்கள் ago