தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தந்தை-மகன் (ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ்) காவல் மரண வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதருக்கு மரண தண்டனை விதித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கின் போது, கடையை தாமதமாக மூடியதாகக் கூறி விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் காவல் நிலையத்தில் கொடூரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டு உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், சிபிஐ (CBI) இந்த வழக்கைக் கையில் எடுத்து விசாரணை நடத்தியது.
ஆறு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்ற இந்தத் தொடர் விசாரணையின் முடிவில், ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 9 போலீஸாரும் குற்றவாளிகள் என்று ஏற்கனவே மார்ச் 23, 2026 அன்று நீதிமன்றம் உறுதி செய்தது. இன்று (ஏப்ரல் 6, 2026) வெளியான தண்டனை விவரங்களின்படி, முதல் குற்றவாளியான ஸ்ரீதருக்கு மரண தண்டனையுடன் ரூ.15 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மற்ற காவலர்களுக்கும் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன. மனித உரிமைகளை மீறி நிகழ்த்தப்பட்ட இந்த “அரிய வகை குற்றத்திற்கு” (Rarest of Rare) உரிய நீதி கிடைத்துள்ளதாகப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரும் பொதுமக்களும் கருதுகின்றனர்.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…