ஒட்டுமொத்த தமிழகத்தையும் மிக்ஜாம் புயல் புரட்டி போட்டு விட்டது. இந்த புயல் வங்கக் கடலில் உருவாகி திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற பல இடங்களில் அதிகமான மழை பெய்து இருக்கிறது. பலருமே வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். மேலும், கன மழையால் சென்னையில் உள்ள தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து இருக்கிறது.
சில இடங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் நீர் புகுந்து தேங்கி நிற்கிறது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், மக்கள் வெளிவர முடியாத சுழலில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து தமிழக அரசு மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதோடு இது வரலாறு காணாத மழை என்றும் கூறுகிறார்கள். இந்த புயலால் சாதாரண மக்கள் மட்டும் இல்லாமல் சினிமா பிரபலங்கள் பலருமே பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
தற்பொழுது மீட்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் சினிமா பிரபலங்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள். மிக்ஜாம் புயல் வெள்ளத்தில் சிக்கி சென்னை மக்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் சென்னையில் ஏ ஆர் எஸ் கார்டனில் தான் விஜய் மற்றும் சன் டிவி தொடர்கள் எடுக்கப்பட்டு வருகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ், இலக்கியா போன்ற தொடர்கள் அங்கு தான் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் இப்போது அங்குள்ள சீரியல் செட் வீடுகள் அனைத்தும் மழை வெள்ளத்தில் மூழ்கி இருக்கின்றது. அங்கு தண்ணீர் சரியாகி பழையபடி மாற 10 நாட்களுக்கு மேல் ஆகும் என அங்குள்ள நபர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் ஷூட்டிங்கும் தற்பொழுது நிலைமை சரியாகும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) 108 இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக…
உத்தரப் பிரதேச மாநிலம் அம்பேத்கர் நகரில் உள்ள நேனுவா காம்போசிட் பள்ளியில் (Nenua Composite School), பள்ளி மாணவர்கள் வகுப்பறைகளைப்…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், இன்று தமிழக ஆளுநரை நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார். இருப்பினும்,…
புதுச்சேரியில் தங்கியிருந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள், தாங்கள் தங்கியிருந்த சொகுசு விடுதியிலிருந்து தற்போது வேறொரு விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்கள் தங்கியிருந்த பழைய…
மத்தியப் பிரதேச மாநிலம் சத்னா மத்திய சிறையில் வாரண்ட் இன்சார்ஜ் ஆகப் பணியாற்றி வந்தவர் பிரோசா காட்டூன். இவர் தனது…
பிரயாக்ராஜில் உள்ள மோதிலால் நேரு மருத்துவக் கல்லூரியில் (MLNMC) அரங்கேறியுள்ள அதிர்ச்சியளிக்கும் ராகிங் சம்பவம், மருத்துவக் கல்வி நிறுவனங்களின் பாதுகாப்புக்…