Categories: சினிமா

இனி இவருக்கு பதில் இவர்…. ‘மோதலும் காதலும்’ சீரியலில் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்ட முக்கிய நடிகை…

Spread the love

விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது சூப்பர் ஹிட் ஆக பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் புதிதாக தொடங்கப்பட்ட பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று உள்ளது. அதில் குறிப்பாக சிறகடிக்க ஆசை, மோதலும் காதலும் போன்ற தொடர்களை கூறலாம். கடந்த வருடம் ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்ட இந்த சீரியல் தற்போது 200 எபிசோடுகளுக்கும் மேல் ஒளிபரப்பாகியுள்ளது.

இயக்குனர் சுரேஷ் சண்முகம் இயக்கி வரும் இந்த சீரியலில் அஸ்வதி மற்றும் சமீர் இருவரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இவர்கள் வேதா மற்றும் விக்ரம் என ஏற்று நடித்து வரும் அந்த கதாபாத்திரங்களாகவே இந்த சீரியலில் வாழ்ந்த வருகின்றனர். இவர்களுக்கு என்று தற்பொழுது சமூக வலைத்தளத்தில் தனியாக ரசிகர்கள் பட்டாளமே உருவாகியுள்ளது. இவர்களின் கெமிஸ்ட்ரி அந்த அளவிற்கு ரசிகர்களை கவர்ந்துள்ளது .

இந்த சீரியல் ஹிந்தி தொடர் ஒன்றின் ரீமேக் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த சீரியலில் வேதாவுக்கு, ‘குழந்தை பெரும் பாக்கியம் இல்லை என்று ஏற்கனவே கூறப்பட்டிருந்த நிலையில், தற்போது விக்ரம் வேதா இருவரும் ஆசிரமத்தில் இருந்து சிகிச்சை பெற்று வந்து மீண்டும் மருத்துவமனையில் பரிசோதித்த பொழுது, வேதாவின் குறைகள் அனைத்து அனைத்தும் நீங்கி விட்டதாகவும், கர்ப்பப்பையில் இருந்த கட்டிகள் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டதாகவும் ,வேதா இனி மேல் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என டாக்டர் கூறிய அவர்களை சந்தோஷப்படுத்தி உள்ளார்.

எலியும்  பூனையுமாக இருந்த இவர்களுக்குள் தற்பொழுது மெல்ல மெல்ல காதல் தொடங்கியுள்ளது. இந்நிலையில் இந்த  சீரியல் இருந்து தற்போது முக்கிய நடிகை ஒருவர் விலகி உள்ளார். அவருக்கு பதிலாக வேறொரு நடிகை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதாவது நந்தினி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை ஸ்ரீதேவி இரண்டாவது முறை கர்ப்பமாக இருப்பது நமக்கு தெரிந்தது தான். தற்பொழுது இவர் தனது 2வது  பிரசவத்தை முன்னிட்டு சீரியலை விட்டு விலக, அவருக்கு பதிலாக நடிகை கார்த்திகா நந்தினி ஆக  களமிறங்கியுள்ளாராம். இனி அவரது எபிசோடுகள் ஒளிபரப்பாகும் என்று கூறப்படுகிறது.

Begam

Recent Posts

ஆர்சிபி டிஜே செய்த ‘அந்த’ ஒரு தப்பு!… கொதித்தெழுந்த சிஎஸ்கே நிர்வாகம்… பிசிசிஐ-க்கு பறந்த புகார் கடிதம்… மைதானத்தில் நடந்த ‘பகீர்’ சம்பவம்…!!!

ஐபிஎல் 2026 சீசனில், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு…

3 minutes ago

“நீ ஒரு முஸ்லிம், உன்னால் இந்திய ராணுவத்தில் சேர முடியாது” ஏளனமாக பேசிய ஊர் மக்கள்… தடைகளை உடைத்து இந்திய ராணுவத்தில் இணைந்த இளைஞர்.. “நீ சாதிச்சிட்ட” குவியும் பாராட்டுக்கள்…!!

“நீ ஒரு முஸ்லிம், உன்னால் இந்திய ராணுவத்தில் சேர முடியாது” என ஏளனம் செய்தவர்களின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்து, ராணுவத்தில்…

7 minutes ago

“இந்த பூனைக்குட்டிக்கு உங்க பூனையே தந்தை” நீங்க தான் வளர்க்கணும்… பக்கத்துக்கு வீட்டாரின் வாக்குவாதத்தால் போலீஸ் ஸ்டேஷன் வரை சென்ற பஞ்சாயத்து…!!

பெங்களூரு பகுதியில் செல்லப் பிராணிகளால் அண்டை வீட்டாருக்கு இடையே ஏற்பட்ட விசித்திரமான மோதல், காவல்துறையினரின் தலையீட்டால் ஒருவழியாகச் சமாதானத்தில் முடிந்தது.…

13 minutes ago

சீனாவிடம் இருந்து சாட்டிலைட்டை விலைக்கு வாங்கிய ஈரான்… விண்ணில் இருந்து அமெரிக்கத் தளங்களைத் தூக்கியடித்த ‘மாஸ்டர் பிளான்’… அதிர வைக்கும் உளவுத் தகவல்கள்…!!!

சமீபத்திய ஈரான்-அமெரிக்கா மோதலின் பின்னணியில், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளைக் கண்காணிக்க ஈரான் சீனத் தயாரிப்பு செயற்கைக்கோளைப்…

16 minutes ago

மாறுவேடப் போட்டிக்காக மகன் உடல் முழுவதும் பெயிண்ட் பூசிய தாய்… கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி… உயிருக்கே ஆபத்து என கண்டிக்கும் நெட்டிசன்கள்..!!

அர்ஜென்டினாவில் பள்ளி மாறுவேடப் போட்டிக்காகத் தனது மகனைத் தயார் செய்த தாயின் விபரீத முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போட்டியில்…

20 minutes ago

பகீர்..! கிரிக்கெட் மேட்ச் முடிந்த சில மணி நேரங்களில்.. மகளைக் கொன்று தாயும் தற்கொலை.. நடந்தது என்ன..? வெளியான பகீர் பின்னணி..!!

பெங்களூரு பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க சுவர்ணா என்ற தாய், தனது 13 வயது மகளைக் கொலை செய்துவிட்டுத் தானும்…

25 minutes ago