விஜய் டிவி ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியலில் ஒன்றுதான் மகாநதி. இந்த சீரியலின் கதை ஆரம்பத்தில் அப்பா மகள்களின் பாசத்தை மையமாகக் கொண்டு தொடங்கியது போன்று இருந்தது. பிறகு அப்பாவின் மரணத்திற்கு பிறகு மகள்கள் தங்களுடைய வாழ்க்கையில் படும் துன்பங்கள் பிறகு அதிலிருந்து எப்படி மீண்டு வருகிறார்கள் என்பது போன்ற பாச உணர்வோடு போராட்டம் கலந்ததாக இந்த சீரியல் இருந்து வருகிறது.
இந்த சீரியல் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த சீரியலில் தற்போது யாரும் எதிர்பார்க்காத திருப்பங்களும் வந்திருக்கிறது. ஏற்கனவே காவிரி நிவினை காதலித்து இருந்த நிலையில் எதிர்பாராத விதமாக அவர்கள் இருவரும் பிரிந்து இருந்தனர். அதைத்தொடர்ந்து காவேரி விஜய்யோடு ஒரு வருட காண்ட்ராக்ட் திருமணம் செய்திருக்கிறார்.
இந்த நிலையில் இருவருடைய திருமணம் எளிமையாக நடைபெற்று விட்டதால் இவர்களுடைய வரவேற்பை பிரமாண்டமாக நடத்த வேண்டும் என்று விஜய்யின் வீட்டார் முடிவு செய்திருக்கின்றனர். இந்த திருமண வரவேற்பில் பசுபதி நிவினும் காவிரியும் காதலிக்கும் போது எடுத்த போட்டோவையும் வீடியோவையும் கொண்டு வந்து எல்லார் முன்னாடியும் போட்டு காட்டி விடுகிறார்.
இருந்தாலும் விஜய் தன்னுடைய காண்ட்ராக்ட் திருமணம் வீட்டிற்கு தெரிய வந்து விடக்கூடாது என்பதற்காக விஜய், காவேரி என் பொண்டாட்டி. அவ கல்யாணத்துக்கு முன்னாடி எப்படி இருந்தா என்பதெல்லாம் எனக்கு பிரச்சனையே இல்ல என்று பசுபதியை அடித்து அவமானப்படுத்தி வெளியே அனுப்புகிறார். இதனால் எல்லோரும் சந்தோஷமாக இருக்கின்றனர். இந்த சீரியலில் கங்கா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை பிரதீபா. இவர் தற்பொழுது மகாநதி சீரியலை விட்டு விலக நடிகை திவ்யா கணேஷ் இந்த சீரியலில் கங்காவாக இணைந்துள்ளார்.
இதற்கு முன்னர் நடிகை பிரதிபா பல சீரியல்களில் இவர் நடித்திருந்தாலும் மகாநதி சீரியல் இவருக்கென்று ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்தி தந்திருக்கிறது.சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடிய இவர் அவ்வப்பொழுது தனது புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.
சீரியலில் ஹோம்லியாக இருக்கும் நடிகை பிரதீபா நிஜத்தில் செம மாடர்ன். தற்பொழுது இவர் கடற்கரையில் மாடர்ன் உடையில் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மகாநதி சீரியல் கங்காவா இது? என்று ஆச்சரியமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
ரயில் தண்டவாளத்தில் ஒரு குழந்தை நின்று கொண்டிருக்க, மின்னல் வேகத்தில் ரயில் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் அங்கே நின்றிருந்த மனிதர்கள்…
பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் நாகர்கோயிலுக்குச் சென்றபோது, திரு. கோமதம் வீரராகவன் கிரிஜா என்ற சிறுமியைச் சந்தித்த நெகிழ்ச்சியான காணொளி…
இந்தியாவின் போட்டி நிறைந்த வங்கித்துறையில் நிலவும் கடும் பணி அழுத்தம் காரணமாக, 24 வயதான ஐஐடி டெல்லி முன்னாள் மாணவர்…
மதுபோதையில் மிதமிஞ்சிய ஆட்டம் போட்ட இளம்பெண் ஒருவர், தார் (Thar) காரின் மேற்கூரை மீது அமர்ந்திருக்க, ஓட்டுநர் காரைச் சாமர்த்தியமாகக்…
பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் உள்ள குருதாஸ்பூர் மத்தியா கிராமத்தில் அரங்கேறியுள்ள ஒரு கொடூரமான மனிதநேயமற்ற சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும்…
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில், தனது பிஞ்சு குழந்தையின் கண்ணெதிரேயே தாய் ஒருவரை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்ட கொடூரச்…