சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் வெங்கடேஷ். இவருடைய முழு பெயர் வெங்கடேஸ்வரன்.

இவர் விருதுநகரை பூர்வீகமாகக் கொண்டவர். நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக சென்னைக்கு குடி பெயர்ந்தார்.

இவர் விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ சீசன் 2வில் ரக்ஷிதாவுக்கு அப்பாவாக நடித்த மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றார்.

அதன் பிறகு விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஒளிபரப்பாகி மக்கள் மனதை கவர்ந்த ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் கண்ணம்மாவுக்கு அப்பாவாகவும் நடித்திருந்தார்.

இதை தொடர்ந்து இவர் ஈரமான ரோஜாவே சீரியலிலும் அப்பா கதாபாத்திரத்தில் நடித்தார் இதை தொடர்ந்து இவர் சின்னத்திரை மட்டும் நடிக்காமல் வெள்ளித்திரையிலும் நடித்துள்ளார் .

இவர் தமிழில் மைனா, பீட்சா ,பேட்ட போன்ற 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நடிகர் ,வில்லன்

, காவல்துறை என பல குணச்சித்திர வேடங்களில் தனக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார்.

இவர் திரையுலகில் இருபது ஆண்டு காலமாக பணியாற்றி வருகிறார். நடிகர் வெங்கடேஷ் பாமா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவருக்கு நிவேதா என்ற மகளும் தேவ் ஆனந்த் என்ற மகனும் உள்ளனர். இவர் மாரடைப்பின் காரணமாக உயிர் இழந்தார்.


தற்போது இவரின் குடும்ப புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

