தமிழக அரசியல் களத்தில் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. ஆளும்கட்சியான தவெக பிரதான எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் திமுக ஆகிய மூன்று தரப்பிற்குமே இத்தேர்தல் முடிவு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. களத்தில் நிலவும் கடுமையான போட்டியின் பின்னணியில், இத்தேர்தலின் முடிவுகள் தமிழகத்தின் வருங்கால அரசியல் போக்கையே மாற்றியமைக்கும் என அரசியல் கணக்குகள் போடப்பட்டு வருகின்றன.
இவை அனைத்திற்கும் மேலாக, இந்த இடைத்தேர்தல் முடிவை வைத்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தனது அடுத்தகட்ட அரசியல் தீர்மானத்தை எடுக்க உள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சமீபகாலமாக திமுகவுக்குள் அவருக்கு முன்பிருந்த அளவிற்கு முக்கியத்துவமும் மரியாதையும் அளிக்கப்படவில்லை என்ற அதிருப்தியில் அவர் இருப்பதாகக் கூறப்படுகிறது.
தாராபுரம் தேர்தல் முடிவுகள் தனக்குச் சாதகமாக அமையாத பட்சத்தில் அல்லது கட்சியில் தனது நிலைப்பாடு தொடர்ந்து புறக்கணிக்கப்படும் பட்சத்தில், செந்தில் பாலாஜி புதிய அரசியல் பாதையைத் தேர்ந்தெடுக்கக் கூடும் என்ற பேச்சும் பலமாக அடிபடுகிறது. இதனால் திமுக மேலிடமும், பிற அரசியல் கட்சிகளும் இத்தொகுதியின் முடிவை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன. இந்த இடைத்தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் மட்டுமின்றி, திமுகவின் உள்வீட்டு அரசியலிலும் பெரிய திருப்பங்களை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி பகுதியில் தனது சிறுமி மகளுடன் காரில் பயணித்துக் கொண்டிருந்த ஒரு பெண், நடுவழியில் எதிர்பாராத…
குன்றத்தூரில் தனது குழந்தைகளைக் கொன்ற வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற அபிராமியின் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.…
மத்தியப் பிரதேச மாநிலம் ராஜ்கர் பகுதியில் உள்ள பியாவ்ரா காட்டுப்பகுதியில், 17 வயது இளம்பெண் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டு தலை…
டெல்லி புடாரி பகுதியில் கடந்த 2018-ஆம் ஆண்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் விசித்திரமான முறையில் உயிரிழந்த சம்பவம்…
பெங்களூரு ஃப்ரீடம் பார்க்கில் வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு (SIR) எதிராகப் பிரபல யூடியூபர் துருவ் ரதி மற்றும் நடிகர் பிரகாஷ்…
ஃபிரோசாபாத்தின் டி.ஏ.வி மார்க்கெட் பகுதியில், திருமண முறிவு வழக்கு நிலுவையில் இருந்த சூழலில் தனித்து வாழ்ந்து வந்த தம்பதியிடையே ஏற்பட்ட…