தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. ஒரு பக்கம் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் திமுக ஆட்சியை தமிழகத்தில் அமைத்து விட வேண்டும் என்ற நிலைப்பாடோடு மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார். மறுபக்கம் அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள பாஜக தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் அமையும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறது. இப்படி மாறி மாறி கட்சியினர் தொடர்ந்து தேர்தல் பணியில் ஈடுபட்டு வர முக்கிய பிரபலங்களும் கட்சியில் இணைந்து வருகிறார்கள்.
இந்நிலையில் ஓரணியில் தமிழ்நாடு என்ற திமுக உறுப்பினர் சேர்க்கையில் மாற்று கட்சியினர் பலரும் திமுகவில் இணைந்து வரும் நிலையில் கட்சியினர் விறுவிறுப்பாக வேலை செய்து கொண்டிருக்கின்றனர். இதனிடையே பாஜக முன்னால் கரூர் தெற்கு மாநகர தலைவர், அதிமுக கரூர் தெற்கு மாநகர ஐடி விங் துணைச்செயலாளர் உள்ளிட்ட பலர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு திமுக அடையாள அட்டையை வணங்கி தேர்தல் பணி மற்றும் ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பை தீவிர படுத்த செந்தில் பாலாஜி அறிவுறுத்தினார்.
சேலம், நாமக்கல் மற்றும் தருமபுரி மாவட்டங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களை ஏமாற்றி, அவர்களின் பெயரில் கோடிக்கணக்கில் வங்கிக் கடன் பெற்று…
விருதுநகர் மாவட்டம் சூலக்கரை பசும்பொன் நகர் பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவரின் மனைவி பாண்டிச்செல்வி. முதல் திருமணத்தின் மூலம் இவருக்கு…
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க 'ஜந்தர் மந்தர்' சுற்றுலாத் தலத்திற்குச் சென்ற அமெரிக்க உள்ளடக்க உருவாக்குநர் ஒருவருக்கு,…
தானே நகரின் மக்கள் நடமாட்டம் மிகுந்த தலாவ்பாலி பகுதியில், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாகக் கூறப்படும்…
குருகிராமில் 25 வயது இளைஞர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டு, உயிருக்குப் போராடும் நிலையில் அவரது வீட்டு வாசலிலேயே வீசப்பட்ட சம்பவம்…
அமெரிக்காவின் நியூயார்க் நகரிலுள்ள புரூக்ளின் பகுதியில் நிகழ்ந்த கோர விபத்து ஒன்றில், பழமையான மூன்று மாடிக் கட்டிடம் இடிந்து தரைமட்டமானதில்…