கோவையை டார்கெட் செய்த திமுக… பெரிய சம்பவம் செய்த செந்தில் பாலாஜி… செய்வதறியாமல் திண்டாடும் இபிஎஸ்…!

Spread the love

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருப்பதால் வழக்கம் போல அதிமுக மற்றும் திமுக போட்டிக்கு தயாராகிவிட்டது. அதிமுக ஒரு பக்கம் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற சுற்றுப்பயணத்தையும், திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற பயணத்தையும் தொடங்கி அதனை சிறப்பாக நடத்தி வருகின்றது. அதேசமயம் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் சேர்ப்பதற்கான வேலைகளும் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது.

இந்த நிகழ்வில் முன்னிலை பெறுவது திமுக என்றுதான் சொல்ல வேண்டும். மாற்றுக் கட்சிகளில் கூட தொண்டர்கள் தான் கட்சி மாறி வருகிறார்கள். ஆனால் திமுகவில் மட்டும் அதிமுகவை சேர்ந்த முக்கிய அமைச்சர்கள் இணைந்து வருகின்றன. அதன்படி சிங்காநல்லூர் தொகுதியில் 2006 மற்றும் 2011 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் எம்எல்ஏவாக இருந்த சின்னசாமி திடீர் திருப்பமாக திமுகவில் இணைந்துள்ளார். ஏற்கனவே அதிமுகவிலிருந்து அன்வர் ராஜா, மைத்ரேயன், மருது அழகுராஜா போன்ற முக்கிய தலைவர்கள் திமுகவில் இணைந்த நிலையில் தற்போது புதிதாக சின்னசாமியும் திமுகவில் இணைந்துள்ளது இபிஎஸ்ஸுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

கோவையில் தொடர்ந்து தோல்வியை தழுவி வரும் திமுக இந்த முறை அங்கு வெற்றி பெற வேண்டும் என்று அந்தப் பகுதியை செந்தில் பாலாஜியிடம் ஒப்படைத்துவிட்டது. இந்நிலையில் கோவையை மெல்ல மெல்ல தி.மு.க வசம் கொண்டு வரும் செந்தில் பாலாஜியை முதலில் அதிமுக அமைச்சர்களை திமுகவில் சேர்க்கும் பணியை கையில் எடுத்துள்ள நிலையில் அது தற்போது வெற்றி பெற்றுள்ளது. அதிமுகவின் முக்கிய முகமாக இருந்த செங்கோட்டையன் தமிழக வெற்றி கழகம் கட்சியில் சேர்ந்தது பேசு பொருளாக நிலையில் தற்போது சின்னசாமியின் இணைவு அரசியலில் அடுத்த பரபரப்பை கிளப்பியுள்ளது

Nanthini

Recent Posts

BREAKING: தமிழகத்தில் தவெக முதலிடம்…. அதிரும் அரசியல் களம்….!!

தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4, 2026) காலை 8 மணிக்குத் தொடங்கி…

3 minutes ago

BREAKING: தவெக முன்னிலையில் உள்ள தொகுதிகள்…. கலக்கத்தில் பெரிய தலைவர்கள்… !!

தபால் வாக்கு எண்ணிக்கையில் தமிழக வெற்றிக் கழகம் 25-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பெரம்பூரில் விஜய், கோபிசெட்டிபாளையத்தில் செங்கோட்டையன்,…

9 minutes ago

BREAKING: முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் முன்னிலை…. அதிர்ச்சியில் அதிமுக, தவெக…!!

தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4, 2026) காலை 8 மணிக்குத் தொடங்கி…

17 minutes ago

BREAKING: 54 தொகுதிகளில் திமுக முன்னிலை… அதிமுகவை முந்திய தவெக….!!

தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4, 2026) காலை 8 மணிக்குத் தொடங்கி…

23 minutes ago

BIG BREAKING: அமைச்சர் துரைமுருகனுக்கு பின்னடைவு…. கலக்கத்தில் திமுக….!!

வேலூர், காட்பாடி தொகுதியில் அமைச்சர் துரைமுருகன் தபால் வாக்குகள் எண்ணிக்கை 118 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்துள்ளார். அதே தொகுதியில்…

29 minutes ago

BREAKING: வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்… சற்றுமுன் பரபரப்பு தகவல்…!!

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டது. இந்த நிலையில் மதுரை…

34 minutes ago