அதிமுகவில் ஏற்கனவே ஓபிஎஸ் நீக்கப்பட்ட நிலையில் அவருக்குப் பிறகு செங்கோட்டையனும் சமீபத்தில் கட்சியிலிருந்து மொத்தமாக நீக்கப்பட்டார். இபிஎஸ் மீது அதிருப்தியை வெளிப்படுத்தும் நிர்வாகிகளை அவர் கட்சியில் இருந்து மொத்தமாக நீக்கிய வருகின்றார். அதன்படி தான் செங்கோட்டையனையும் அவருடைய ஆதரவாளர்களையும் மொத்தமாக அதிமுகவிலிருந்து இபிஎஸ் நீக்கினார். இதனைத் தொடர்ந்து கடந்த 27 ஆம் தேதி பனையூரில் உள்ள தமிழக வெற்றிக்கழகம் அலுவலகம் சென்று அங்கு விஜய் முன்னிலையில் செங்கோட்டையன் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் இணைந்தார்.
அதனை முடித்துவிட்டு கோவை விமான நிலையம் வந்தபோது அவருக்கு விஜயின் கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய செங்கோட்டையன், பல அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தமிழக வெற்றி கழகம் கட்சிக்கு வருவதற்கு தயாராக இருக்கின்றனர், பலரும் வருவார்கள் என்று கூறி கொளுத்தி போட்டார். இதனைத் தொடர்ந்து நேற்று கோபிசெட்டிபாளையத்தில் பொதுக்கூட்டம் போட்ட பழனிச்சாமி செங்கோட்டையனை கடுமையாக விமர்சித்திருந்தார்.
செங்கோட்டையனுக்கு பதவி மற்றும் அடையாளம் கொடுத்தது எல்லாமே அதிமுக, ஆனால் இன்று மாற்றுக் கட்சிகள் இணைந்திருக்கிறார், வாக்கு கேட்க வீடு வீடாக சென்றவர் ராஜினாமா செய்த போது மக்களிடம் கேட்டாரா? இப்படிப்பட்டவரா மக்களுக்கு நன்மை செய்ய போகின்றார்? அவருக்கு மக்கள் மீது அக்கறை கிடையாது. அவரை எச்சரித்தும் தலைமைக்கு பத்து நாட்கள் கெடு விதித்தார். அப்படிப்பட்டவரை எப்படி கட்சியில் வைத்துக்கொள்ள முடியும்? யாருடனும் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது என்ற பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றிய பிறகும் அவர்களுடனே போய் பேசுகின்றார். அவர் செய்தது மிகப்பெரிய துரோகம் என்று பழனிச்சாமி கடுமையாக பேசியிருந்தார்.
இந்நிலையில் இன்று கோவை விமான நிலையத்திற்கு வந்த செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, எடப்பாடி பழனிச்சாமி இப்போது எனக்கு தலைவர் இல்லை. அவர் சொன்ன கருத்துக்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமும் கிடையாது. யார் என்ன வேண்டுமானாலும் பேசட்டும், நான் தெளிவாக இருக்கிறேன் என்று கூறிவிட்டு செங்கோட்டையன் அங்கிருந்து நகர்ந்து சென்றார்.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரோசாபாத் மாவட்டத்தில், தலித் சிறுமி ஒருவர் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, அதன்பின் கொல்லும் நோக்கில் கழுத்து அறுக்கப்பட்ட…
அமெரிக்காவில் உயர்கல்வி பயின்று வந்த தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 23 வயது மாணவி திடீரென மாயமான சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே…
குழந்தைகளைக் கண்காணிக்கத் தவறிவிட்டு, அனைத்துத் தவறுக்கும் மற்றவர்கள் மீது பழிபோடும் தற்காலப் பெற்றோரின் பொறுப்பற்ற போக்கு குறித்து சமூக வலைதளங்களில்…
ஏர் இந்தியா விமானத்தில் 6 அடி 8 அங்குல உயரம் கொண்ட நபர் கழிவறையைப் பயன்படுத்தும் போது படும் சிரமங்களை…
வயது வெறும் எண் மட்டுமே என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் வகையில், 78 வயதான பிரபல மூத்த பாடகி உஷா…
மும்பை வீதிகளில் மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டு, எவ்விதச் சோர்வுமின்றி உற்சாகமாகச் சொமேட்டோ உணவு விநியோகம் செய்துவரும் மாற்றுத்திறனாளி…