50 ஆண்டு கால அனுபவம்… முதல் முறை கையில் எடுக்கும் அஸ்திரம்…தவெக அமைச்சரவையில் செங்கோட்டையனுக்கு ஒதுக்கப்பட்ட ‘அந்த’ பவர்ஃபுல் துறை….!

Spread the love

தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழக வெற்றி கழகம் (தவெக) ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், அனுபவம் வாய்ந்த மூத்த அரசியல்வாதி கே.ஏ. செங்கோட்டையனுக்குப் பொதுப் பணித் துறை (PWD) ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 1977-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் காலத்தில் தொடங்கி, ஒன்பது முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சாதனைக்குச் சொந்தக்காரரான இவர், சுமார் 50 ஆண்டுகால அரசியல் அனுபவம் கொண்டவர். அதிமுகவின் முக்கியத் தூண்களில் ஒருவராக இருந்த இவர், தற்போது தவெகவின் உயர்மட்ட நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டு வருவது அக்கட்சியின் நிர்வாக ரீதியான பலத்தை உறுதிப்படுத்துகிறது.

கடந்த காலங்களில் போக்குவரத்து, விவசாயம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் வருவாய்த் துறை எனப் பல்வேறு துறைகளில் தடம் பதித்த செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராகப் பணியாற்றியபோது கொண்டு வந்த நவீன மாற்றங்கள் விஜய்யைக் கவர்ந்ததாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, கல்வித் துறையில் இவர் அறிமுகப்படுத்திய சீர்திருத்தங்கள் மற்றும் நிர்வாகத் திறன் ஆகியவை, அரசு நிர்வாகத்தில் ஒரு ‘சீனியர்’ கரம் இருக்க வேண்டும் என்ற விஜய்யின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது. இதுவரை அவர் கையாண்டிராத பொதுப் பணித் துறை இவருக்கு வழங்கப்பட உள்ளது, அவரது நீண்டகால அனுபவத்திற்கு அளிக்கப்படும் அங்கீகாரமாகக் கருதப்படுகிறது.

பொதுப் பணித் துறையைப் பொறுத்தவரை, தமிழக வரலாற்றில் எம்.ஜி.ஆர் காலத்தில் முத்துச்சாமியும், ஜெயலலிதா காலத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கே.வி.ராமலிங்கமும் அமைச்சர்களாகப் பணியாற்றியுள்ளனர். எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது இத்துறையைத் தனது வசமே வைத்திருந்தார் என்பது அதன் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது. இத்தகைய ‘பவர்ஃபுல்’ துறையைச் செங்கோட்டையன் போன்ற ஒரு தேர்ந்த நிர்வாகியிடம் ஒப்படைப்பதன் மூலம், அரசுத் திட்டங்களை விரைவாகவும் நேர்த்தியாகவும் செயல்படுத்த முடியும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

தமிழகத்தில் 1952-க்கு பிறகு அமையும் முதல் கூட்டணி ஆட்சியில், புதிய தலைமுறைத் தலைவரான விஜய்யின் வேகமும், செங்கோட்டையன் போன்ற அனுபவமிக்கவர்களின் விவேகமும் இணைந்து செயல்படுவது ஆட்சிக்குத் தனிப் பலம் சேர்க்கும். செங்கோட்டையனின் சீனியாரிட்டியை மதிக்கும் வகையிலும், அதே சமயம் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கிலும் தவெக அரசு இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இத்துறையில் அவர் மேற்கொள்ளப்போகும் புதிய முன்னெடுப்புகள் தவெக ஆட்சியின் முதல் மைல்கல்லாக அமையக்கூடும்.

Nanthini

Recent Posts

ராங் ரூட்டில் போறீங்க…” பைக்கில் வந்து அட்ராசிட்டி… ஊழியரை கொடூரமாக தாக்கி கொன்ற கும்பல்…. பதற வைக்கும் CCTV காட்சிகள்…!!

ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன்கார் மாவட்டம் கோகாமேடி சுங்கச்சாவடியில் 21 வயதான காளு லால் என்ற வாலிபர் ஊழியராகப் பணியாற்றி வந்தார்.…

19 minutes ago

“என்ன தான் நடக்குது…?” ஒன்றும் அறியாமல் நின்ற வாலிபர்…. திடீரென வந்து சுற்றி வளைத்து தாக்கிய கும்பல்…. நொடியில் நடந்த சம்பவம்…. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டம் வாலட்டர்கஞ்ச் போலிஸ் எல்லைக்குட்பட்ட கணேஷ்பூர் பகுதியில், இளைஞர் ஒருவர் சாலையோரமாக அமைதியாக நின்று…

30 minutes ago

திக் திக் நிமிடங்கள்…! கார் மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்ட பைக்…. 4 பேர் துடிதுடித்து பலியான சோகம்…. பதைப்பதைக்கும் வீடியோ…!!

ஹரியானா மாநிலம் நூ பகுதியில் அமைந்துள்ள தில்லி தர்பார் உணவகம் எதிரே, அதிவேகமாக வந்த வாகனம் ஒன்றும் மோட்டார் சைக்கிளும்…

42 minutes ago

ரோட்டைக் கடந்த ரகசிய முதலை… 8 அடி ஆழப் பள்ளத்தில் சிக்கிய திக் திக் நிமிடங்கள்…. வீடியோ வைரல்….!

மும்பையின் ஆரே மெட்ரோ காம்ப்ளக்ஸ் வளாகத்திற்குள் உள்ள மின்சாரக் குழாயில் சிக்கியிருந்த சுமார் 3 அடி 7 அங்குலம் நீளமுள்ள…

51 minutes ago

“ஜனநாயகத்திற்கே ஆபத்தா?”…. தலைமைத் தேர்தல் ஆணையர் உடனே விலக மு.க.ஸ்டாலின் கெடு…. சற்றுமுன் பரபரப்பு….!

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றும், SIR (சிறப்பு புலனாய்வு அறிக்கை) முறையிலான…

1 மணத்தியாலம் ago

கடலூரில் பகீர்…. மயங்கிய நிலையில் கிடந்த 3 வயது சிறுமி.. பரிசோதித்த டாக்டர்களுக்கு அதிர்ச்சி… 17 வயஸு சிறுவன் செய்த கொடூரம்…!

கடலூர் மாவட்டம் துறைமுகம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள அங்கன்வாடிப் பள்ளிக்குச் சென்ற 3 வயது பெண் குழந்தை, வீட்டின்…

2 மணத்தியாலங்கள் ago