“யாராவது காப்பாத்துங்க…” மூத்த வழக்கறிஞருக்கு கத்தியால் சரமாரி குத்து… மர்ம நபரின் வெறிச்செயல்… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

Spread the love

கர்நாடக மாநிலம் சிக்கபள்ளாபூர் மாவட்டம் கௌரிபிதனூரில் மூத்த வழக்கறிஞர் ஒருவர் பட்டப்பகலில் நடுரோட்டில் வைத்து கத்தியால் கழுத்தில் கொடூரமாகக் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்த சம்பவம் அப்பகுதி சட்டத்துறை வட்டாரத்திலும் பொதுமக்களிடையேயும் பெரும் பதைபதைப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கௌரிபிதனூர் மகாத்மா காந்தி வட்டம் அருகே உள்ள கசபா கிராமப்புற வேளாண் கூட்டுறவு சங்க கட்டிடத்தின் முதல் தளத்தில் மூத்த வழக்கறிஞர் சன்னக்கி வெங்கடராமப்பா என்பவரது அலுவலகம் இயங்கி வருகிறது. செவ்வாய்க்கிழமை காலை வழக்கம்போல அலுவலகத்திற்கு வந்த வெங்கடராமப்பா படிக்கட்டில் ஏறிச் சென்றபோது, அவரைப் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர் ஒருவன் திடீரெனத் தான் மறைத்து வைத்திருந்த கூர்மையான கத்தியால் அவரது கழுத்தில் கொடூரமாகக் குத்திவிட்டுத் தப்பியோடினான்.

கழுத்தில் பலத்த வெட்டுக் காயமடைந்து ரத்தம் சொட்டச் சொட்ட அலறிய வழக்கறிஞரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆட்டோவில் ஏற்றி முதலுதவி சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் பெங்களூரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இச்சம்பவத்தைக் கண்டித்துக் கௌரிபிதனூர் மற்றும் சிட்லகட்டா வழக்கறிஞர்கள் சங்கத்தினர் நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, களத்தில் குதித்த தனிப்படை போலீசார் கங்கசந்திரா பகுதியைச் சேர்ந்த துருவா என்பவனைக் கைது செய்து, இந்தத் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ள கொடூரக் காரணம் குறித்துத் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

“விஜய் கொடுத்த ஷாக்… 2029-ஐ குறிவைக்கும் மாஸ்டர் பிளான்”… கலக்கத்தில் திமுக… பாஜகவுடன் ரகசியக் கூட்டணிக்குக் காய் நகர்த்தும் தலைமை?…. பரபரப்பு தகவல்…!

தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக மற்றும் தவெக இடையேயான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளது. முதல்வர் விஜய்…

6 minutes ago

“உங்க ஆட்சி லட்சணம் என்னாச்சு?” – திமுகவை மடக்கிப் பிடித்த தவெக…. இணையத்தையே அதிரவைக்கும் தவெக vs திமுக மோதல்….!

தமிழத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி அமைந்தது முதலே, சட்டம்-ஒழுங்கு விவகாரங்களை மையமாகக் கொண்டு திமுகவுக்கும் தவெக-வுக்கும் இடையிலான இணைய…

10 minutes ago

ஐயோ… ரேபிஸ் தாக்குதலா?… வீதி வழியா போகவே பயமா இருக்கு… 5 கிராமங்களை அலறவிட்ட மர்ம நாய்… பீகாரில் அதிர்ச்சியில் உறைந்த மக்கள்…!

பீகாரின் முங்கர் மாவட்டத்தில் உள்ள அசர்கஞ்ச் வட்டாரத்தைச் சேர்ந்த ஜலாலாபாத், நாராயண்பூர், மில்கி, ஜோதரி மற்றும் அத்ராஸ் ஆகிய ஐந்து…

11 minutes ago

“அன்பில் மகேஸுக்கு அடுத்து கில்லியில் சிக்கப்போகும் அந்த 3 சீனியர்கள் யார்?”…. பக்காவாக காய் நகர்த்தும் CM விஜய்…. அதிர்ச்சியில் உறைந்த திமுக….!

திமுகவின் முக்கிய முகமாகவும், முன்னாள் அமைச்சருமான அன்பில் மகேஷ் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம்…

15 minutes ago

ஏய்… கத்தக் கூடாது… பேசாமல் இரு… ஓடும் காரில் 20 வயதுப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… 2 மணி நேரப் பேரதிர்ச்சி… ம . பி – யில் அரங்கேறிய ஷாக்கிங் சம்பவம்…!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த 20 வயது பெண் ஒருவர், திங்கள்கிழமை இரவு உஜ்ஜைன்-இந்தூர் நெடுஞ்சாலையில் ஓடும் காரில்…

17 minutes ago

“10 நாளா என்ன பண்ணிட்டு இருந்தீங்க?”…. NDMA-விடம் மாட்டிக்கொண்ட தமிழ்நாடு அரசு…. வைரலாகும் ஷாக் ரிப்போர்ட்….!

அக்டோபர் 16 முதல் அக்டோபர் 26 வரை, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (NDMA) மத்திய கட்டுப்பாட்டு அறைக்குத் தமிழக…

19 minutes ago