தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக பல்வேறு சிக்கல்களை தொடர்ந்து சந்தித்து வருகிறது. பாஜகவுடன் இ பி எஸ் கூட்டணி வைத்திருப்பதால் அதிமுக கட்சி நிர்வாகிகள் பலரும் அதிருப்தியில் உள்ளனர்.
அதன் வெளிப்பாடாக சமீபத்தில் செங்கோட்டையன் பிரிந்து சென்றவர்களை மீண்டும் ஒருங்கிணைக்க இபிஎஸ்-க்கு கெடு விதித்திருந்தார். ஆனால் அதற்கு அடுத்த நாளே செங்கோட்டையனை கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கி இபிஎஸ் உத்தரவிட்டார். இதனால் அதிமுகவில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது. அதேசமயம் செங்கோட்டையனின் அடுத்த நகர்வு என்ன என்பது கவனிக்கத்தக்க ஒன்றாக உள்ளது. சமீபத்தில் அமித்ஷாவை அவர் டெல்லியில் சந்தித்து பேசியதாக கூறி இருந்தார்.
இந்நிலையில் டெல்லியில் அமித்ஷாவை செங்கோட்டையன் சந்தித்தாரா இல்லையா என்ற சர்ச்சை எழுந்துள்ளது. சமீபத்தில் டெல்லி சென்ற செங்கோட்டையன் அரசியல் சூழ்நிலை குறித்து அமித்ஷாவிடம் பேசியதாக கூறினார். ஆனால் பாஜக திறப்பு இதில் மலுப்பலாகவே பதில் அளித்து வருகின்றது. அமித்ஷாவை சந்தித்ததாக அவர் சொல்லிக் கொள்வதாகவும் ஆனால் அதிகாரபூர்வ தகவல் வரவில்லை என வானதி சீனிவாசன் மற்றும் கஸ்தூரி ஆகியோர் கூறுகின்றனர். இது தற்போது புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், தலைநகர் சென்னை மக்களுக்காக 'சென்னை சூப்பர்-6' என்ற அதிரடி தேர்தல் வாக்குறுதிகளை திமுக…
இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் 'தாய்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சகட்டப் பரபரப்பை எட்டியுள்ள நிலையில், இன்னும் நான்கு நாட்களே மீதமிருப்பதால் அரசியல் கட்சிகள் அனல்…
பீகார் மாநிலம் சமஸ்திப்பூரில், வரதட்சணை கொடுமையால் கொல்லப்பட்டதாகக் கருதப்படும் இளம்பெண் ஒருவரின் உடலை, அடக்கம் செய்யப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு…
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி அஜ்மத் உசேன் (41). இவருக்கும் தஸ்லீமா பேகம் (35) என்பவருக்கும்…
சமஸ்திபூர் மாவட்டம் சக் சாஹோ பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில், வகுப்பறையின் பின் வரிசை மேஜை மீது படுத்துக்கொண்டு ஆசிரியை…