“ரூ. 2500 மகளிர் உதவித்தொகை எப்போது கிடைக்கும்?”…. இறுதியாக வாய் திறந்த அமைச்சர் செங்கோட்டையன்…. இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்….!

Spread the love

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் கூட்டுறவு பண்டக சாலை அங்காடி சார்பில் ரூ.200 விலையிலான 10 பொருட்கள் அடங்கிய சிறப்பு மளிகை தொகுப்பு விற்பனையை தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார். கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் பொதுமக்களுக்குக் குறைந்த விலையில் தரமான பொருட்களை வழங்குவதற்காக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக முதல்வர் விஜய் வருகிற 3-ஆம் தேதி பெருந்துறையில் நடைபெறும் விழாவில் பங்கேற்று ரூ.1,100 கோடி மதிப்பீட்டிலான புதிய நலத்திட்டங்களைத் தொடங்கி வைக்க உள்ளதாகத் தெரிவித்தார்.

மகளிர் உதவித்தொகையாக ரூ.2,500 வழங்குவது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், இத்திட்டம் குறித்து தமிழக முதல்வர் விஜய் மட்டுமே இறுதி முடிவு எடுப்பார் எனக் கூறினார். மேலும், முந்தைய திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எதுவும் அடுத்த நாளே முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், தற்போதைய அரசு அனைத்துத் திட்டங்களையும் மக்களுக்கு விரைவாகக் கொண்டு சேர்க்கும் நோக்கில் ஒரு பொற்கால ஆட்சியை வழங்கி வருவதாகப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்ப்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கள் குறித்துப் பேசிய அவர், எதிர்க்கட்சிகள் அரசுக்கு நல்ல ஆலோசனைகளை வழங்க வேண்டுமே தவிர வீண் விமர்சனங்களைச் செய்யக்கூடாது என்றார். மேலும், உள்ளாட்சித் தேர்தல் குறித்து நிலுவையில் உள்ள வழக்குகள் முடிந்த பிறகும், வரும் பிப்ரவரி மாதத்துடன் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் காலக்கெடு முடிவடைந்த பிறகுமே உரிய முடிவு எடுக்கப்படும் என்றும், சட்டமன்ற இடைத்தேர்தல் குறித்து தேர்தல் ஆணையமே முடிவெடுக்கும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

நீலகிரி, கொடைக்கானலில் ஏற்பட்ட நிலச்சரிவு குறித்துப் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், பெரிய அளவில் பாதிப்புகள் எதுவுமின்றி நிலைமை தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், பேரிடர் மேலாண்மைக் குழுக்கள் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் கூறினார். அத்துடன், ஈரோடு மாவட்டத்தில் ஆட்சேபனை இல்லாத புறம்போக்கு நிலங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளதாகவும், முதலமைச்சரின் உத்தரவு வந்தவுடன் தகுதியுடைய அனைவருக்கும் விரைவாக வீட்டு மனைப் பட்டா வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

Nanthini

Recent Posts

காதல் விவகாரம்…! செக் வெச்ச அப்பா… ரூமுக்குள் மகளுடன் தொழிலாளி… ஆட்டோவில் பிணமாக சென்ற இளைஞர்… நடந்தது என்ன?…!!

தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஆனந்த், பெங்களூரு எலகங்கா பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்துக்கொண்டு மக்காச்சோள இயந்திரங்கள் தயாரிக்கும் தொழில் செய்து…

6 minutes ago

“ஐயோ கடவுளே… சாவு இப்படியா வரணும்”…. லாரி சக்கரத்தில் சிக்கி துடித்த காவலர்…. அடுத்த நொடியே…. நெஞ்சை உலுக்கும் சிசிடிவி காட்சி….!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பணி நிமித்தமாகக் காவலாளி ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அதிவேகமாக வந்த லாரி மோதிப் பரிதாபமாக…

29 minutes ago

முதலமைச்சர் இல்லம் அருகே அதிர்ச்சி…. தொப்புள் கொடியுடன் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை…. CCTVயில் சிக்கிய தாய்-மகள்…. அதிர்ச்சி சம்பவம்….!

சென்னை நீலாங்கரை, கபாலீஸ்வரர் நகர் தெற்கு 4-வது மெயின் ரோடு பகுதியில், பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம்…

37 minutes ago

அமெரிக்க தேர்தலுக்கு நடுவே வடகொரியா வீசிய குண்டு… அலறி அடிக்கும் உலக நாடுகள்…. கிம் ஜாங் உன் போட்ட மாஸ் பிளான்…!

வடகொரியா தனது வான் எல்லை பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில், மனித உதவியின்றி இலக்குகளைத் தானாகவே துல்லியமாகக் கண்டறிந்து தாக்கும்…

43 minutes ago

வானில் பறந்த ராணுவ ஹெலிகாப்டர்… திடீரென அருகே வெடித்து சிதறிய பட்டாசுகள்… மிரண்டு போன ரசிகர்கள்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

அமெரிக்காவில் கால்பந்து போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற ராணுவ வான்வழி சாகசத்தின் போது ஹெலிகாப்டர் மிக அருகில் பட்டாசுகள் வெடித்துச் சிதறிய…

43 minutes ago

“8 மாத உழைப்பு வீண்… உடல் நலமும் போச்சு…” தூய்மை பணியில் இறங்கிய பிரபல ஆர்வலருக்குக் கை, கால்களில் தொற்று… வைரலாகும் வீடியோ…!!

மத்தியப் பிரதேசத்தில் மாசடைந்த அஜ்னார் நதியைத் தொடர்ச்சியாகச் சுத்தம் செய்து வந்த பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் பிட்டு தபாஹி, நச்சுநீரால்…

51 minutes ago