தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி இந்த முறை பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என்ற நிலைப்பாட்டோடு செயல்பட்டு வருகிறது. அதே சமயம் இபிஎஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதால் முக்கிய நிர்வாகிகள் பலரும் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் கட்சியிலிருந்து முக்கிய நிர்வாகிகள் பலரும் விலகி வரும் நிலையில் நேற்று செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து விலகுவதாக செய்தி வெளியாகியிருந்தது.
அதே சமயம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய செங்கோட்டையன் செப்டம்பர் 5ஆம் தேதி முக்கிய முடிவை அறிவிக்க உள்ளதாகவும் கூறியிருந்தார். இது புதிய பரபரப்பை கிடப்பியுள்ள நிலையில் தனது கட்சி அலுவலகத்தில் இருந்த ஈபிஎஸ் போட்டோவை நீக்கிய செங்கோட்டையன், எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் அண்ணா புகைப்படங்களுடன் பெரியார் புகைப்படத்தை இணைத்துள்ளார்.
அதேபோல நேற்று காலையில் 100க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தியவர் மாலையில் பவானி எம்எல்ஏ பண்ணாரி, நம்பியூர் ஒன்றிய செயலாளர் தம்பி சுப்பிரமணி உள்ளிட்ட 10 பேருடன் மட்டும் ஆலோசித்தார். இதில் அவரின் நிலைப்பாடு குறித்து தெளிவுபடுத்தியதாக கூறப்படுகிறது.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…