பரபரப்பு.! விஜய் ஆட்சிக்கு கை கொடுக்கப்போகும் அந்த ரகசிய கட்சிகள்.? செங்கோட்டையன் கொடுத்த சஸ்பென்ஸ்… அதிரும் அரசியல் களம்..!!

Spread the love

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர்கள் சென்னை செல்வதற்காகக் கோவை விமான நிலையம் வந்தபோது, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். இந்த வெற்றி மக்கள் ஆதரவால் தவெக தலைவருக்குக் கிடைத்துள்ள மகத்தான வெற்றி என்று குறிப்பிட்ட அவர், ஒரு இயக்கம் வளரத் தியாகம் மிக அவசியம் என்றார். எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் தியாகத்தால் வளர்ந்த அதிமுக தற்போது தடுமாறிக் கொண்டிருப்பதாகவும், “தான்” என்ற அகந்தை கொண்டவர்களுக்குத் தெய்வம் உரியப் பாடத்தைப் புகட்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக, ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல் முதல் தேர்தலிலேயே தவெக மாபெரும் சரித்திர வெற்றி படைத்துள்ளதாகச் செங்கோட்டையன் பெருமிதம் தெரிவித்தார். மக்கள் விஜய்யை நேசிப்பதாகவும், அவர்களுக்கு அவர் என்றும் உறுதுணையாக இருப்பார் என்றும் அவர் கூறினார். “தெய்வத்தால் ஆகாதது ஒன்றுமில்லை” எனக் குறிப்பிட்ட அவர், இறைவனின் அருளால் தளபதி விஜய் விரைவில் ஆட்சிப் பீடத்தில் அமர்வார் எனத் தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை பலம் தவெக-விடம் இல்லை என்பது குறித்தும், கூடுதல் கட்சிகள் ஆதரவு அளிக்குமா என்பது குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த செங்கோட்டையன், தவெக ஆட்சி அமைக்கக் கூடுதல் கட்சிகள் நிச்சயம் ஆதரவு தரும் என உறுதியாகக் கூறினார். “நாளை மறுநாள் பாருங்கள்” என அவர் விடுத்த அதிரடி பதில், தமிழக அரசியலில் அடுத்த சில நாட்களில் பெரிய மாற்றங்கள் நிகழப்போவதை உறுதிப்படுத்தும் வகையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Soundarya

Recent Posts

உதயநிதிக்கு முதல்வர் விஜய் கொடுத்த ஸ்பேஸ் முடிந்தது… பொறுமையா இருந்தது இதுக்குதான்…. அம்பலப்படுத்திய நடிகர் ஷாம்…!

தமிழக சட்டசபையில் கடந்த சில வாரங்களாக "முதலமைச்சர் விஜய் ஏன் அமைதியாக இருக்கிறார்?", "அவருக்குப் பேசத் தெரியவில்லையா?" என்று எழுந்த…

38 seconds ago

திமுகவிலிருந்து விலகுகிறாரா செந்தில் பாலாஜி?… அதிமுக, பாஜகவுக்கு கொடுத்த ‘ஷாக்’ ட்ரீட்மென்ட்.. சட்டசபையில் நடந்த அதிரடி திருப்பம்…!

அண்மைக் காலமாக, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியைத் தங்கள் வசம் இழுக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், பாஜகவும் தீவிரமாக…

10 minutes ago

“நாங்க மட்டும் இல்லன்னா அன்னைக்கு பதவியேற்பே நடந்திருக்காது”.. விஜய்க்கு கம்யூனிஸ்ட் கொடுத்த அதிரடி ஷாக்… தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு….!

தமிழக அரசியல் களம் தற்போது 'தவெக'ஆட்சி நீடிப்பது யாரால்?' என்ற காரசாரமான விவாதத்தால் சூடேறியுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில்…

17 minutes ago

“எமர்ஜென்சிக்கே அஞ்சாத நாங்க இதுக்கா பயப்படப் போறோம்?”… தவெக-வை வறுத்தெடுத்த அமைச்சர் சேகர்பாபு….!

தமிழக அரசியல் களம் தற்போது சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் உருட்டல் மிரட்டல்களுக்கு எல்லாம் திமுக ஒருபோதும் பயப்படாது…

23 minutes ago

“திமுக, அதிமுகவுக்கு வன்னி அரசு கொடுத்த மரண மாஸ் பதிலடி”…. நேரில் அழைத்து விஜய் செய்த காரியம்…. அதிர்ந்துபோன அரசியல் களம்….!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும், பெரும்பான்மைக்குக் கூட்டணி தேவைப்பட்ட சூழலில் விசிக,…

29 minutes ago

“நம்ம பெப்ஸி உமாவா இது?.. இத்தனை வருசமா எங்க இருந்தாங்க?”… வைரலாகும் புகைப்படத்தைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்த 90s கிட்ஸ்…!

தமிழ் சின்னத்திரை வரலாற்றில் தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கி, 90-கள் மற்றும் 2000-களின் தொடக்கத்தில் ரசிகர்களின் நெஞ்சங்களை கொள்ளையடித்தவர்…

36 minutes ago