தமிழக அரசியல் வரலாற்றில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். திமுக, அதிமுக, நாம் தமிழர் போன்ற பிரதான கட்சிகள் ஏற்கனவே களமிறங்கியுள்ள நிலையில், முதல் முறையாகத் தேர்தலைச் சந்திக்கும் தவெக 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. இதில் முக்கிய திருப்பமாக, அக்கட்சியின் தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடவுள்ளார். இது அக்கட்சியின் தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வேட்பாளர் பட்டியலில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள மற்றொரு முக்கிய அம்சம், அதிமுகவின் முன்னாள் அமைச்சரான கே.ஏ. செங்கோட்டையனின் பெயர் இடம் பெற்றிருப்பதுதான். எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த செங்கோட்டையனுக்கு, கட்சியின் மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டது. அனுபவம் வாய்ந்த மூத்த தலைவர்கள் தவெகவில் இணைவது கட்சிக்குக் கூடுதல் பலத்தைச் சேர்த்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
செங்கோட்டையன் தனது கோட்டையாகக் கருதப்படும் கோபிசெட்டிபாளையம் தொகுதியிலேயே பத்தாவது முறையாகப் போட்டியிடுகிறார். இதற்கு முன்னர் இதே தொகுதியில் ஒன்பது முறை களம் கண்டுள்ள அவர், எட்டு முறை அமோக வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 1996 தேர்தலில் மட்டுமே அவர் தோல்வியைத் தழுவியிருந்தார். ஒரு அனுபவமிக்க மூத்த அரசியல்வாதி, புதிய கட்சியின் சார்பில் தனது சொந்தத் தொகுதியில் களம் காண்பது அந்தப் பகுதியில் மும்முனைப் போட்டியை மிகவும் சுவாரஸ்யமாக்கியுள்ளது.
மேலும், தவெக சார்பில் ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த், அருண்ராஜ், சிடிஆர் நிர்மல் குமார், கு.ப. கிருஷ்ணன், சத்தியபாமா மற்றும் ஜே.சி.டி பிரபாகர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுக்கான தொகுதிகளையும் விஜய் அறிவித்துள்ளார். குறிப்பாக வில்லிவாக்கத்தில் கார்த்திக் மோகன் மற்றும் ஆதவ் அர்ஜுனா இடையேயான போட்டி ‘யங் பிளட்’ பாலிடிக்ஸாகப் பார்க்கப்படுகிறது. புதிய வரவான தமிழக வெற்றிக் கழகம், அனுபவம் மற்றும் இளமை என இரண்டையும் கலந்து வேட்பாளர்களை நிறுத்தியிருப்பது எதிர்வரும் தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரோசாபாத் மாவட்டத்தில், தலித் சிறுமி ஒருவர் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, அதன்பின் கொல்லும் நோக்கில் கழுத்து அறுக்கப்பட்ட…
அமெரிக்காவில் உயர்கல்வி பயின்று வந்த தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 23 வயது மாணவி திடீரென மாயமான சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே…
குழந்தைகளைக் கண்காணிக்கத் தவறிவிட்டு, அனைத்துத் தவறுக்கும் மற்றவர்கள் மீது பழிபோடும் தற்காலப் பெற்றோரின் பொறுப்பற்ற போக்கு குறித்து சமூக வலைதளங்களில்…
ஏர் இந்தியா விமானத்தில் 6 அடி 8 அங்குல உயரம் கொண்ட நபர் கழிவறையைப் பயன்படுத்தும் போது படும் சிரமங்களை…
வயது வெறும் எண் மட்டுமே என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் வகையில், 78 வயதான பிரபல மூத்த பாடகி உஷா…
மும்பை வீதிகளில் மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டு, எவ்விதச் சோர்வுமின்றி உற்சாகமாகச் சொமேட்டோ உணவு விநியோகம் செய்துவரும் மாற்றுத்திறனாளி…