“குருவி சுடுவது போல் 13 பேரை கொன்கிறீர்களே”.. விஜய்யை பேச EPS-க்கு அருகதை இல்லை… தவெக செங்கோட்டையன் ஆவேசம்..!!

Spread the love

அதிமுகவில் இருந்து விலகி தற்போது தமிழக வெற்றி கழகத்தில் (TVK) இணைந்துள்ள  செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் விமர்சனங்களுக்கு மிகக் கடுமையான பதிலடியைத் தந்துள்ளார். எடப்பாடி பழனிசாமி ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை நினைவூட்டிய செங்கோட்டையன், “அன்று 13 பேரை குருவி சுடுவது போலச் சுட்டுக் கொன்றார்கள்; அப்படிப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு நடிகர் விஜய்யைப் பற்றிப் பேச எந்தத் தகுதியும் இல்லை” எனச் சாடினார். மேலும், கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை விஜய் நேரில் சென்று சந்திக்கவில்லை என்ற ஈபிஎஸ்-ஸின் விமர்சனத்திற்கு, “விஜய் நேரில் சென்று உதவினார், ஆனால் நீங்கள் பாதிக்கப்பட்டவர்களைத் திரும்பிப் பார்த்தீர்களா?” எனக் கேள்வி எழுப்பினார்.

வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அரசியல் களம் மாறியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், போட்டி என்பது இப்போது திமுக மற்றும் தவெக இடையேதான் இருக்கும் என்றும், அதிமுக இந்தப் போட்டியில் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமி திமுகவின் ‘பி-டீம்’ ஆகச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டிய அவர், விஜய்யின் மக்கள் செல்வாக்கைக் கண்டு அதிமுக தலைமை அச்சமடைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

Soundarya

Recent Posts

“அம்மா என்னைக் காப்பாத்துங்க…” மகனின் கடைசி வார்த்தைக்காகப் போராடும் தாய்….! லக்கிம்பூர் விபத்து வழக்கில் புதிய ட்விஸ்ட்…!!

டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…

1 மணத்தியாலம் ago

BREAKING: தேர்வு முடிவுகள் வெளியானது… சற்று முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…

1 மணத்தியாலம் ago

“செருப்புகள் சிதறின.. மைக்குகள் மாயமானது!”.. பஞ்செட்டியில் விஜய்யின் மாஸ் எண்ட்ரி… ஸ்தம்பித்த தேசிய நெடுஞ்சாலை… தவெக தொண்டர்கள் ‘அலப்பறை…!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…

2 மணத்தியாலங்கள் ago

“எழுதி வைத்துக்கொள்ளுங்கள், விஜய்தான் அடுத்த முதல்வர்”… அதிர வைக்கும் ஜோதிடர் ராதன் பண்டிட் கணிப்பு….!

தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…

2 மணத்தியாலங்கள் ago

விஜய்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி… நக்கீரன் கணிப்பால் தவெக கூடாரமே காலி?… அதிர வைக்கும் ரிப்போர்ட்….!

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…

2 மணத்தியாலங்கள் ago

“ஹாலிவுட் லெவல் அனுபவம் இனி இந்தியாவிலே”… 456 இருக்கைகள், பிரம்மாண்ட ஸ்க்ரீன்… திருச்சியை அதிரவைக்கும் டால்பி சினிமா….!

திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…

2 மணத்தியாலங்கள் ago