Categories: சினிமா

ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தில் தனுஷ்& கார்த்தி… அந்த படத்தை எடுப்பதில் என்ன சிக்கல்?- ஓப்பனாகப் பேசிய செல்வராகவன்!

Spread the love

தமிழ் சினிமாவில் தனக்கென தனது தனித்துவமான படங்களின் மூலம் ஒரு இடத்தை பிடித்தவர் இயக்குனர் செல்வராகவன். இவரது இயக்கத்தில் வெளிவந்த முதல் திரைப்படம் ‘துள்ளுவதோ இளமை’. ஆனால் அந்த படம் அவரின் தந்தையின் பெயரில் ரிலீஸ் ஆனது.

அதன் பின்னர் அவர் இயக்கிய காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலணி , புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன மற்றும் என் ஜி கே ஆகிய திரைப்படங்கள் அவருக்கு தனித்த அடையாளத்தை உருவாக்கின. ஆனால் அதன் பிறகு அவர் எடுத்த படங்கள் அவரின் தொடக்கக் கால படங்கள் கொடுத்த தாக்கத்தைக் கொடுக்கவில்லை.

தொடர்ந்து அவர் எடுத்த இரண்டாம் உலகம், என் ஜி கே மற்றும் நெஞ்சம் மறப்பதில்லை ஆகிய படங்கள் தோல்விப் படங்களாக அமைந்தன. ஒரு கட்டத்தில் அவர் இயக்கிய படங்கள் வரிசையாக தோல்வி அடைய அவர் நடிகராகவும் அறிமுகமானார். அந்த வகையில் சாணிக்காயிதம், பீஸ்ட் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். இறுதியாக இவர் நடிப்பில் இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் ‘பகாசுரன்’ திரைப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.  இவர் இறுதியாக தனுஷ் நடிப்பில் வெளியே வந்த ‘நானே வருவேன்’ திரைப்படத்தை இயக்கியிருந்தார். அதன் பின்னர் தனுஷ் இயக்கியுள்ள ராயன் திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இப்போது செல்வராகவன் ‘7 ஜி ரெயின்போ காலனி 2’ மற்றும் ‘மெண்டல் மனதில்’ ஆகிய இரண்டு படங்களை ஒரே நேரத்தில் இயக்கி வருகிறார். சில வருடங்களுக்கு முன்னர் ஆயிரத்தில் ஒருவன் 2 போஸ்டரையும் ரிலீஸ் செய்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தார்.

சமீபத்தில் அளித்த நேர்காணலில் ஆயிரத்தில் ஒருவன் 2 படம் பற்றி பேசியுள்ளார். அதில் “ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தை ரொம்ப சீக்கிரமாகவே தனுஷை வைத்து அறிவித்துவிட்டோம். அந்த படத்தை இயக்க நான் வெறித்தனமாகக் காத்திருக்கிறேன். ஆனால் அந்த படத்தைக் கார்த்தி இல்லாமல் எடுக்க முடியாது. அதனால் நடிகர்களின் ஒருவருட கால்ஷீட்டும் ஒரு தயாரிப்பாளரும் கிடைத்தால் எடுத்து விடலாம். முதல் பாகம் போல இப்போது கஷ்டப்படத் தேவையில்லை” எனக் கூறியுள்ளார்.

vinoth

Recent Posts

அப்படி என்னதான் இருக்கு…? “இதய இமோஜியால் டாலரை மறைத்த த்ரிஷா…” ரசிகர்களின் கேள்விகளால் சூடேறிய சோஷியல் மீடியா…!!

நடிகை த்ரிஷா, மூத்த நடிகை ராதிகா சரத்குமாருடன் இணைந்து எடுத்த புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்திருந்தார். சாதாரணமாகப்…

6 minutes ago

45 நிமிட போராட்டம்…! நானா படேக்கரின் இதய துடிப்பை கொண்டு வர போராடிய மருத்துவர்கள்… கடைசியில் நடந்த சோகம்…!!

இந்தியத் திரையுலகின் முன்னணி மூத்த நடிகரும், சமூக ஆர்வலருமான நானா படேக்கர் (75) கோவாவில் உள்ள அவரது இல்லத்தில் திடீரென…

14 minutes ago

நள்ளிரவில் ஸ்டார் ஹோட்டலில் களேபரம்…! இளம்பெண்களை கடத்த முயன்ற நபர்கள்… நண்பர்கள் மீது தாக்குதல்…. பகீர் சம்பவம்…!!

டெல்லி அசோகா ஹோட்டல் வளாகத்தில் உள்ள 'SOHO' கிளப்பிற்கு வெளியே, அக்டோபர் 4-ஆம் தேதி அதிகாலை 3:30 மணியளவில் நாகாலாந்தைச்…

25 minutes ago

அமெரிக்கா Vs ஈரான்… போர் முடிவுக்கு வருமா, தீவிரமாகுமா?… ஈரானை அலறவிட்ட வான்ஸ்… அமெரிக்க துணை அதிபரின் அதிரடி எச்சரிக்கை…!!

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நிலவும் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரவும், அணுசக்தி ஒப்பந்தத்தை எட்டவும் ஈரான் வெறும் வாய்மொழி வாக்குறுதிகளை மட்டும்…

30 minutes ago

“இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்…” நேற்று உயர்ந்த நிலையில் இன்று விலையில் மாற்றமா…? இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்…!!

நேற்றைய தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 வரை உயர்ந்து அதிர்ச்சியளித்த நிலையில், இன்று தங்கம் விலையில் எந்தவித…

32 minutes ago

அதிர்ச்சி..! ரூ.100 கோடி நில மோசடி… வசமாகச் சிக்கிய பெண் ஊழியர் & வழக்கறிஞர்… பெண் ஊழியரின் ரகசிய பிளான் அம்பலம்… பின்னணியில் யார்?…!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி பகுதியில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் முறைகேடாகப் பதிவு செய்த…

38 minutes ago