விஜய்யின் சிபிஐ விசாரணை குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைப்பது என்பது சிங்கத்தின் வாயில் தாமாகவே சென்று மாட்டிக்கொள்வதற்குச் சமம் என்று விமர்சித்துள்ளார். விஜய்யை டெல்லிக்கு வரவழைத்து அரசியல் மற்றும் தேர்தல் தொடர்பான ஒப்பந்தங்களை மேற்கொள்ளவே பாஜக அரசு முயற்சிக்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
கரூர் துயரம் தொடர்பான விசாரணைக்காக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேற்று காலை 11 மணியளவில் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார். இந்தச் சூழலில், மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கைகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
