Categories: சினிமா

எங்கப்பா பாரதிராஜாவோடு சேட்டைக்கு அளவே இருக்காது… மேடையில் உண்மையைப் போட்டுடைத்த சீமான்!

Spread the love

தமிழ் சினிமாவின் போக்கை மாற்றிய ஒரு சில இயக்குனர்களில் பாரதிராஜாவும் ஒருவர். அவர் இயக்கத்தில் வெளியான 16 வயதினிலே திரைப்படம் தமிழ் சினிமாவையே புரட்டி போட்டது. தொடர்ந்து ரத்தமும் சதையுமான கிராமிய மணம் கொண்ட படங்களை கொடுத்து தமிழ் சினிமா ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்டார்.

அவர் தன்னை ஒரு இயக்குனராக நிலைநிறுத்திக் கொண்ட பின்னரும் தனது படங்களுக்கு முன்னணி நடிகர்களை தேடி செல்லாமல் புதுமுக நடிகர்களையே பெரும்பாலும் பயன்படுத்தினார். அப்படிதான் அவர் தன்னுடைய கிழக்கே போகும் ரயில் படத்துக்கே பொருத்தமாக இருப்பார் என்று சுதாகரைத் தேர்வு செய்துள்ளார். அதற்கு முன்னர் அந்த படத்தில் நடிக்க சிரஞ்சீவி கூட ஆடிஷனுக்கு வந்தாராம்.

ஆனால் சிரஞ்சீவியை விட சுதாகர் அந்த கதாபாத்திரத்துக்குப் பொருத்தமாக இருந்தார் என்பதால் அவரையே தேர்வு செய்துள்ளார். அதுபற்றி பேசியுள்ள பாரதிராஜா “சிரஞ்சீவி வந்தான். ஆனால் சுதாகர் என்னை ஏமாற்றி விட்டான். அவனிடம் வேட்டியைக் கொடுத்து பாண்டி பஜாரில் நடக்க விட்டேன். பொருத்தமாக இருந்தான். அதனால் சிரஞ்சீவிக்குப் பதில் சுதாகரையே நடிக்க வைத்தேன்” என்று கூறியுள்ளார்.

அந்தளவுக்கு தன்மேல் அவருக்கு நம்பிக்கை அதிகம். அதே போல அவரிடம் தொழில் கற்றுக்கொண்டு வெளியே வந்து ஹிட் படங்கள் கொடுத்த இயக்குனர்களும் அடக்கம். அது பாக்யராஜில் தொடங்கி சீமான் வரை நீளும் பட்டியல். இந்நிலையில்தான் சீமான் ஒரு மேடையில் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக வேலை செய்வதில் இருக்கும் கஷ்டங்கள் பற்றி பேசியுள்ளார்.

அதில் “எங்க இயக்குனர் பாரதிராஜாகிட்ட உதவி இயக்குனராக வேலை செய்வது அவ்வளவு எளிதில்லை. திடீர்னு ராத்திரி 11 மணிக்குக் கூப்பிட்டு இப்ப ரசம் சாதம் வேணும்பாரு. அந்த பட்டிக்காட்டுல அந்த நேரத்துல ரசம் சோத்துக்கு நாங்க எங்க போறது? ஆளாளுக்கு ஒரு பக்கம் போய் எப்படியாவது ரெடி பண்ணுவோம்.” எனக் கூற அதைக் கேட்டு மேடையில் இருந்த பாரதிராஜா ரசித்து சிரித்து அதை ஆமோதித்துள்ளார்.

vinoth

Recent Posts

“பெண் ஊழியரை மாடியிலிருந்து தள்ளிவிட்டு…” ஷோரூம் வாசலில் வைத்தே மது குடித்துவிட்டு உள்ளே புகுந்த கும்பல்… பயங்கர தாக்குதல்…. வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.ஆர்.புரம் பட்டரஹள்ளி சிக்னல் அருகே உள்ள 'யுனிலைட்' எலக்ட்ரானிக்ஸ் ஷோரூமில், செவ்வாய்க்கிழமை மாலை மது மற்றும்…

6 மணத்தியாலங்கள் ago

20 வருட திருமண வாழ்க்கை….! 9 துண்டுகளாக வெட்டப்பட்டு கார் பேக்கில் வீசப்பட்ட இந்தியர்…! மாயமான மனைவி, மகன்… விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்…!!

கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்த ஆல்வின் பிரகாஷ் குந்தர் என்பவர் கடந்த 14 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள…

6 மணத்தியாலங்கள் ago

“பேனா வாங்க சென்ற 11 வயது சிறுமி…” கை, கால்களை கட்டிப்போட்டு சீரழித்த 56 வயது முதியவர்… பெற்றோரிடம் கதறிய மகள்… இரவில் நடந்த பகீர் சம்பவம்…!!

டெல்லி சதர் பஜார் பகுதியைச் சேர்ந்த 6-ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி, கடந்த செப்டம்பர் 16 அன்று…

6 மணத்தியாலங்கள் ago

“நாங்க போலீஸ்…” கோவிலுக்கு சென்ற  17 வயது சிறுமி… மிரட்டிய சீரழித்த கும்பல்…. பரபரப்பு சம்பவம்…!!

தலைநகர் டெல்லியில் உள்ள புகழ்பெற்ற கல்காஜி மந்திர் மற்றும் இஸ்கான் கோயிலை இணைக்கும் பூங்கா பகுதியில், திங்கள்கிழமை மாலை 17…

7 மணத்தியாலங்கள் ago

“எரிந்துகொண்டிருந்த பிணச் சிதையில் இறைச்சி சமையல்…” உறைந்து போன மகன்… சுடுகாட்டில் நடந்த நடுங்க வைக்கும் சம்பவம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டம் நத்தாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த வீர்பால் என்பவரின் தந்தை உயிரிழந்ததை அடுத்து, அவரது குடும்பத்தினரும்…

7 மணத்தியாலங்கள் ago

“என் தங்கையைக் கொன்றவனை நான் கொன்றுவிட்டேன்…” 4 மாத கர்ப்பிணி கொலை… கணவரை பழி வாங்கிய அண்ணன்…. பகீர் சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஜக்தித்யால் மாவட்டம் மாதப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபறான வைஷ்ணவி (20) என்பவரை, அவரது காதல் கணவரான…

7 மணத்தியாலங்கள் ago