தமிழகத்திற்கும் கர்நாடகாவிற்கும் இடையிலான காவிரி நீர் பிரச்சனை மீண்டும் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக அரசியல் களம் சுவாரசியமான காரசார விவாதங்களால் களைகட்டியுள்ளது. வழக்கம்போல் இந்த ஆண்டும் தமிழகத்திற்குத் தண்ணீர் திறக்க முடியாது என கர்நாடக அரசு முட்டுக்கட்டை போட்ட சூழலில், இதுகுறித்து அம்மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமாரை நேரில் சந்தித்துப் பேச தமிழக முதல்வர் விஜய் திட்டமிட்டதாகக் கூறப்பட்டது. ஆனால், அதற்கு அங்கு எதிர்ப்பு கிளம்பவே, “தற்போதைய சூழலில் விஜய் இங்கு வர வேண்டாம்” என டி.கே.சிவகுமார் கேட்டுக்கொண்டார். தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை நாடத் தயாரான வேளையில், இயற்கையின் திருவிளையாடலாக கர்நாடகாவில் கனமழை பொழிந்து, கபினி அணையில் இருந்து வினாடிக்கு 12,000 கன அடி நீர் தமிழகத்திற்குத் திறந்துவிடப்பட்டது.
தண்ணீர் திறந்துவிடப்பட்ட செய்தி வெளியானதும், சமூக வலைதளங்களில் தவெக தொண்டர்களும் விஜய் ரசிகர்களும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். “விதியுடன் மோது… விஜயுடன் மோதாதே!”, “தளபதி கடவுளின் குழந்தை… அவர் எடுத்த முயற்சியால் தான் கர்நாடகாவில் மழை பெய்து தண்ணீர் கிடைத்துள்ளது!” என்றெல்லாம் அடைமொழிகளுடன் பதிவிட்டு இணையத்தைக் கலக்கினர். ரசிகர்களின் இந்த மிதமிஞ்சிய கொண்டாட்டங்களும், இயற்கையின் மழையை ஒரு தனிநபரின் பிம்பத்தோடு முடிச்சு போட்ட விதமும் சமூக வலைதளங்களில் பெரிய விவாதப் பொருளாக மாறியது.
இந்நிலையில், வழக்கம் போலத் தனது பாணியில் களத்தில் குதித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்த விவகாரத்தைக் கடுமையாக நக்கலடித்துள்ளார். “விஜய் கர்நாடகாவுக்குப் போக நினைச்ச உடனே மழை பெயஞ்சிடுச்சாம்… அவர் கடவுளின் குழந்தையாம்… அதனால் தான் தண்ணீர் திறந்தாங்களாம்… டேய்! கடவுளின் குழந்தை இங்கேயே இருக்கும் போது மழை ஏன்டா கர்நாடகாவில் பெய்யுது? இங்கேயே பெய்ய வேண்டியதுதானே? இங்க பெய்தால் நாங்களே பிடித்துக் கொள்கிறோம். அதைவிட்டுட்டு கர்நாடகாவில் பெய்து, அவர்கள் தண்ணீர் திறந்துவிட்டு, அதை நாம் வாங்க வேண்டுமா… என்னடா பைத்தியக்காரத்தனமா இருக்கு!” எனக் காரசாரமாகவும் நகைச்சுவையாகவும் கேள்வி எழுப்பி அந்த வாதத்தைப் பொடிபொடியாக்கியுள்ளார்.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…