ஸ்ரீதேவி திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானாரா..? பல ஆண்டு ரகசியத்தை போட்டு உடைத்த போனி கபூர்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

By admin on ஐப்பசி 4, 2023

Spread the love

பாலிவுட்டில் முன்னணி தயாரிப்பாளரான போனி கப்பூரின் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தது. கடந்த 1983-ஆம் ஆண்டு மோனா என்பவரை திருமணம் செய்து கொண்டு போனி கபூர் அவருடன் 13 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தார். இவர்களுக்கு அர்ஜுன் கபூர் என்ற மகன் உள்ளார். தற்பொது அர்ஜுன் ஹீரோவாக நடித்த வருகிறார். மோனாவை விவாகரத்து செய்த பின்னர் போனி கபூர் பிரபல நடிகை ஸ்ரீதேவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

   

இருவரும் திருமணத்திற்கு முன்பே உறவில் இருந்ததாகவும், இதனால் ஸ்ரீ தேவி கர்ப்பம் ஆனதாகவும் பல வருடங்களாக கிசுகிசுக்கள் உலா வந்தது. இதுகுறித்து ஸ்ரீதேவி எந்த விளக்கமும் அளித்தது இல்லை. சமீபத்தில் போனி கபூர் அளித்த பேட்டியில், அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அதிரடியாக பதில் அளித்துள்ளார்.

   

 

அவர் கூறியதாவது, முதல் மனைவியை விவாகரத்து செய்யும் முன்பே ஸ்ரீதேவியை காதலித்தேன். அது மோனாவுக்கு தெரியும். ஸ்ரீதேவி கர்ப்பமாவதற்கு முன்பே நாங்கள் ரகசியமாக திருமணம் செய்து கொண்டோம். கடந்த 1996-ஜூன் மாதம் 2- ஆம் தேதி சீரடியில் வைத்து நானும் ஸ்ரீதேவியும் ரகசியமாக திருமணம் செய்தோம். அதன் பிறகு 1997-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தான் ஸ்ரீதேவி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இதற்கு மேலும் இந்த விஷயத்தை மறைக்க முடியாது என்பதால் அனைவர் முன்னிலையிலும் திருமணம் செய்து கொண்டோம். இன்னும் சிலர் திருமணத்திற்கு முன்பே ஸ்ரீதேவி கருவுற்றதாக கூறி வருகின்றனர். எனது பலம், உயிர்நாடி எல்லாமே ஸ்ரீதேவி தான். எனது மகள்களின் வெற்றியை அவள் பார்க்க வேண்டும் என நான் ஆசைப்பட்டேன். ஆனால் இவ்வளவு சீக்கிரமே அவள் உயிரிழந்தது துரதிர்ஷ்டமானது. அவருடைய எல்லா கனவுகளையும் நிறைவேற்ற நான் முயற்சி செய்வேன் என போனி கபூர் கூறினார்.