Categories: சினிமா

கேரளாவில் சர்வதேச திரைப்பட விழா, மத்திய அரசு தடை விதித்த படங்களை தடை மீறி திரையிடும் விழாக்குழு – சேட்டன்களுக்கு என்ன தில்லு பார்த்தியா?

Spread the love

கேரளம் மாநிலம், திருவனந்தபுரத்தில் கேரளா சல்சித்ரா அகாடமி சார்பில் கடந்த 12ம் தேதி துவங்கி வரும் 19ம் தேதி வரை சர்வதேச திரைப்பட விழா நாட்களுக்கு நடந்து வருகிறது. இந்நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த சுமார் 19 படங்களை திரையிட விழாக்குழு தேர்வு செய்திருந்தது. ஆனால் இந்த படங்களை திரையிட மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் அனுமதி வழங்க மறுத்து விட்டது. பின்னர் பீஃப், ஈகல்ஸ் ஆஃப் ரி பப்ளிக், ஹார்ட் ஆஃப் தி வுஃல்ப், ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் காஸா போன்ற 4 படங்கள் மட்டுமே திரையிட அனுமதிக்கப்பட்டது.

சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட விழாக்குழு தரப்பில் தேர்வான படங்களுக்கு அனுமதி மறுத்த காரணங்களை, மத்திய அரசு தரப்பில் அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. இதனால் விழாக்குழு அதிரடி முடிவை எடுத்தது. மத்திய அரசின் அனுமதி கிடைக்காத சுமார் 15 படங்களை திருவனந்தபுரத்தில் நடக்கும் இந்த சர்வதேச திரைப்பட விழாவில் திட்டமிட்டபடி திரையிடுவதற்கு முடிவு செய்திருப்பதாக கேரளா சல்சித்ரா அகாடமி தலைவர் ரசூல் பூக்குட்டி நேற்று அறிவித்தார்.

கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான ஆளும் இடதுசாரி அரசின் ஆதரவை அடுத்து திரைப்பட விழா ஒருங்கிணைப்பாளர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர். சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான பாலஸ்தீன விவகாரம் குறித்த படங்களுக்கு மத்திய அரசு அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது. இத்துடன் அனுமதி மறுக்கப்பட்ட மறைந்த புகழ்பெற்ற சோவியத் இயக்குனர் செர்ஜி ஐசென்ஸ்டீனின் நூறாண்டுகள் பழமையான பேட்டில்ஷிப் பொட்டெம்கின் என்னும் திரைப்படமும் திரையிடப்படுகிறது.

Elango

Recent Posts

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு செக்…! “சொத்து விவரங்களை உடனே காட்டுங்க…” தமிழக அரசு விடுத்த கெடுபிடி உத்தரவு…!!

தமிழகத்தில் உள்ள அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத அனைத்துப் பணியாளர்களும் தங்களது…

2 minutes ago

“ஒரு ஆணாக உணர்ந்தேன்…” லைவ் லொகேஷன் அனுப்பல, போன் பேசல, எந்த பதற்றமும் இல்ல…! சோஷியல் மீடியாவை உலுக்கிய பெண்ணின் வீடியோ…!!

நள்ளிரவில் மும்பை விமான நிலையத்தில் இறங்கி பெண் ஓட்டுநர் இயக்கிய டாக்சியில் பயணித்த பெண் ஒருவர், "இன்றுதான் நான் ஓர்…

18 minutes ago

“அப்போ கூட பிளேட்டை கீழ போடலையே…” ரூ.20 லட்சம் பண பையை தூக்கி சென்ற திருடர்கள்… சிசிடிவி காட்சியை பார்த்து குலுங்கி குலுங்கி சிரிக்கும் நெட்டிசன்கள்…!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் ஸ்கூட்டரில் ரூ.20 லட்சம் பணத்தை வைத்துவிட்டுச் சாலையோரக் கடையில் கச்சோரி சாப்பிட்டுக்கொண்டிருந்த தொழிலதிபரின் பையைக் மர்ம…

26 minutes ago

“லைவ் டிவியில் எகிறி உதைத்த ஆங்கர்…” மாடலின் முகத்தில் பாய்ந்து உதட்டை கிழித்த ட்ரோன்… சோஷியல் மீடியாவில் தீயாய் பரவும் வீடியோ…!!

மெக்ஸிகோ நாட்டில் நேரலைத் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போது தொகுப்பாளர் ஒருவர் ஆத்திரத்தில் ட்ரோன் கேமராவை எட்டி உதைத்ததில், அது பாய்ந்து…

35 minutes ago

“வெளிய யோக்கியன் மாதிரி நடிப்பாங்க…” குழந்தை திருமண குற்றவாளிகள் மாட்டுவது இப்படித்தான்… போலி பிச்சைக்காரன் ஓடிய வைரல் வீடியோவை பகிர்ந்து அசாம் முதல்வர் அதிரடி…!!!

அசாம் மாநிலத்தில் குழந்தைத் திருமண முறையை முற்றிலும் ஒழிப்பதற்காக அம்மாநில அரசு மேற்கொண்டு வரும் தீவிர நடவடிக்கையில் இதுவரை 537…

45 minutes ago

“ஒரு நாளுக்கு 8 பிரேக்… வேலையே பார்க்காம ரீல்ஸ் போடுறாங்க…”  60,000 ஊழியர்கள் விருப்ப ஓய்வு… பழைய இன்ஸ்டா வீடியோக்கள் வைரலானதால் சர்ச்சை… வெடிக்கும் விவாதம்…!!

பிரபல முன்னணித் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் சுமார் 60,000 ஊழியர்களை விருப்ப ஓய்வு திட்டம் மூலம் ஆட்குறைப்பு செய்ய…

51 minutes ago