தேவர் குருபூஜையை ஒட்டி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, காளையார் கோவில், திருப்பத்தூர், இளையான்குடி, தேவக்கோட்டை ஆகிய 7 ஒன்றியங்களில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளித்து அந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல, ராஜராஜ சோழனின் சதய விழா கொண்டாட்டத்தையொட்டி, தஞ்சை மாவட்டத்தில் நவ.1-ம் தேதி பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய நிகழ்வுகள், கோவில் திருவிழாக்களின்போது அந்தந்த மாவட்ட ஆட்ச்சியர்களால் விடுமுறை அறிவிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
