காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பாடிச்சேரி பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் – சாந்தி தம்பதியரின் 2-வது மகள் அர்ச்சனா (16). இவர் ஸ்ரீபெரும்புதூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று இரவு, அர்ச்சனா தனது தாய் சாந்தியுடன் இருசக்கர வாகனத்தில் ஸ்ரீபெரும்புதூர் சென்றுவிட்டு வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார். வாகனத்தை அவரது தாய் சாந்தி ஓட்டிச் சென்றுள்ளார்.
சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீபெரும்புதூர் செங்கல்பட்டு சந்திப்பு அருகே அவர்கள் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த கலவை லாரி எதிர்பாராதவிதமாக இவர்களது இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த தாய்-மகள் இருவரும் வாகனத்துடன் சாலையில் கீழே விழுந்தனர். அப்போது, லாரியின் சக்கரத்தில் அர்ச்சனா சிக்கி படுகாயமடைந்து உயிருக்கு போராடினார்.
விபத்தைக் கண்ட அக்கம்பக்கத்தினர் அர்ச்சனாவை மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து ஸ்ரீபெரும்புதூர் காவல்துறை வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய லாரி ஓட்டுநரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். தாயின் கண்முன்னே மகள் உயிரிழந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாமல்லபுரம் அடுத்த பையனூர் ஓஎம்ஆர் சாலையில் நிகழ்ந்த கோர விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேகமாக வந்த வேனும்,…
வங்கக் கடலில் புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதைத் தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம்…
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் சிட்கோ பகுதியில் உள்ள ஒயின் ஷாப் ஒன்றில், பிரஷர் கன் மூலம் பாய்ந்த இரும்பு ஆணி…
தேசியவாத காங்கிரஸ் தலைவரும் மூத்த அரசியல்வாதியுமான சரத் பவாருக்கு அண்மையில் ஏற்பட்ட உடல்நலக் குறைவைத் தொடர்ந்து, அவருக்குப் பூரண ஓய்வளிக்க…
குஜராத் மாநிலம் சூரத் பகுதியில், வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்காததால் ஏற்பட்ட தகராறில் சக ஊழியரின் தலையைத் துண்டித்து மயானத்தில்…
பீகார் மாநிலம் பக்ஸார் மாவட்டத்தைச் சேர்ந்த ஊரக வளர்ச்சி அதிகாரி அல்பிதா சிங், கடந்த எட்டு மாதங்களாகத் தனக்கு சம்பளம்…