விழுப்புரம் மாவட்டம் செஞ்சி நரசிங்கராயன் பேட்டை பகுதியை சேர்ந்த சாரதி (19) என்பவர் அதே பகுதியில் உள்ள 16 வயது சிறுமியை காதலிப்பதாக கூறிவந்துள்ளார். அதை சிறுமி அங்குள்ள அரசு பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வரும் நிலையில் தொடர்ந்து இரண்டு வருடங்களாக மாணவி பள்ளிக்கு செல்லும் போது மற்றும் வீடு திரும்பும் போது என பின்தொடர்ந்து தன் காதலை ஏற்றுக் கொள்ளுமாறு சாரதி தொல்லை கொடுத்துள்ளார்.
ஆனால் அந்த மாணவி தொடர்ந்து காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஆத்திரமடைந்த சாரதி கடந்த சில மாதங்களுக்கு முன்பு பள்ளிக்குச் சென்ற சிறுமியை பின் தொடர்ந்து வலுக்கட்டாயமாக இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று சிறுவாடி காப்புக்காடு வனப்பகுதியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பிறகு இது தொடர்பாக சிறுமி புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து சாரதியை கைது செய்து விசாரணை நடத்தினர்.
இதேபோல கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சிங்கவரம் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த 12ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக வினோத்குமார் என்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். அதேபோல மற்றொரு பள்ளி மாணவியை மிரட்டி இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று வனப்பகுதியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து செஞ்சி சுற்றுவட்டார பகுதிகளில் பள்ளி சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வரும் நிலையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 106 இடங்களை வென்று தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், அக்கட்சியின்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நிகழ்த்தியுள்ள சாதனை, பல தசாப்த கால…
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில், இந்த வாரம் "கணவன் மனைவி இடையே Personal Space…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் திமுக தோல்வி முகத்தில் இருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதல்வர் பதவியை…
திருமணமான நேஹா என்ற பெண், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனது கணவரைப் பிரிந்து அர்ஜுன் என்ற காதலனுடன் 'லிவ்-இன்' உறவில்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவ்வித எதிர்பாராத திருப்பங்களையும் ஏற்படுத்தலாம் எனக் கணிக்கப்படும் நிலையில், ஆளும் திமுக மற்றும்…