Breaking: பள்ளி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. கோடை விடுமுறை தேதியில் அதிரடி மாற்றம்?… பள்ளிக்கல்வித்துறை வெளியிடப்போகும் அறிவிப்பு…!

Spread the love

தமிழகத்தில் நிலவும் கடும் வெப்பம் மற்றும் தேர்தல் சூழலைக் கருத்தில் கொண்டு, 1 முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டுத் தேர்வு தேதிகளில் பள்ளிக்கல்வித்துறை முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளது. முன்னதாக ஏப்ரல் 24 வரை தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஏப்ரல் 23-ஆம் தேதி தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதால், தேர்வுகள் அனைத்தும் ஏப்ரல் 16-ஆம் தேதிக்குள் முடிக்கப்பட உள்ளன. இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 17 முதல் மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்குகிறது.

தற்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியைத் தாண்டி வாட்டி வதைத்து வருகிறது. எலினோ விளைவு காரணமாக இந்த ஆண்டு வெப்பத்தின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால், ஜூன் 4-ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், அந்தச் சமயத்தில் வெயிலின் தீவிரம் குறையவில்லை என்றால் பள்ளி திறப்பு தேதியைத் தள்ளி வைப்பது குறித்து அரசு மறுபரிசீலனை செய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளிலேயே 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் விலையில்லாப் பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகளை வழங்கத் தேவையான விரிவான ஏற்பாடுகளைத் தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. மாணவர்கள் தடையின்றிப் பாடங்களைக் கற்க ஏதுவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளிகள் திறப்பதற்கு முன்னதாகவே ஆசிரியர்கள் வருகை தந்து, மாணவர் சேர்க்கை மற்றும் வகுப்பறைத் தயார் நிலை போன்ற பணிகளை முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Nanthini

Recent Posts

“பரந்தூருக்கு ‘நோ’.. டேட்டா சென்டருக்கு ‘எஸ்’….. விஜய் அரசின் முதல் MoU… பின்னணியில் இருக்கும் யாரும் சொல்லாத கசப்பான உண்மை…!

தமிழக முதலமைச்சராக சி.ஜோசப் விஜய் பொறுப்பேற்ற குறுகிய நாட்களிலேயே எல்&டி நிறுவனத்துடன் கையெழுத்தான 18,600 கோடி ரூபாய் மெகா முதலீட்டு…

45 seconds ago

டீ குடிக்க கூப்பிட்ட பெண்… வீட்டிற்குள் காத்திருந்த எச்.ஐ.வி பேரதிர்ச்சி… 70 வயது முதியவருக்கு நடந்த கொடூரம்…!

மத்தியப் பிரதேச மாநிலம் பிந்த் மாவட்டத்தைச் சேர்ந்த 60 வயது விவசாயி ஒருவர், சில நாட்களுக்கு முன்பு தனது பைக்கில்…

11 minutes ago

ஒருவழியா முடிவுக்கு வந்த பஞ்சாயத்து…. “இனிமேல் அந்த பேச்சுக்கே இடமில்லை”… இபிஎஸ், ஓபிஎஸ் வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு….!

: அதிமுகவில் கடந்த 2022-ஆம் ஆண்டு தலைமை பதவியைக் கைப்பற்றுவது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இடையே கடுமையான…

22 minutes ago

“இந்த பாவத்திற்கு என்னை மன்னிச்சிடுங்க” 12 ஆண்டுகால சித்திரவதை.. மகளைத் தாக்கிய கணவனை.. தாய் செய்த கொடூரம்..!!

நீலத்திற்கும் தீன்தயாலுக்கும் கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு, தீன்தயால் தனது மனைவி நீலத்தை அடிக்கடி கொடுமைப்படுத்தியும்,…

32 minutes ago

“மெழுகுவர்த்தி பஞ்சாயத்து” இதெல்லாம் ஒன்னும் பெரிய விஷயம் இல்ல… மேயர் பிரியா பரபரப்பு விளக்கம்..!!

சென்னை மாநகராட்சிப் பள்ளி கட்டடத் திறப்பு விழாவில் குத்துவிளக்கேற்றும் நிகழ்வின் போது, தவெக எம்.எல்.ஏ பல்லவி அவமதிக்கப்பட்டதாக எழுந்த புகாருக்குச்…

43 minutes ago