நம் நாட்டில் பணத்தை சேமிக்கவும் முதலீடு செய்வதற்கும் பல திட்டங்கள் இருக்கிறது. ஆனால் எது சிறந்த திட்டம் எது நமக்கு நல்ல லாபம் தரக்கூடியது வட்டி தரக்கூடியது என்பதுதான் குழப்பமாக இருக்கும். இப்போது SBI வழங்கும் சிறப்பான ஒரு திட்டத்தைப் பற்றி இனி காண்போம். குறிப்பிட்ட வட்டி மற்றும் குறைந்த கால அளவில் இருந்தே மாதாந்திர சேமிப்பை முதலீடு செய்ய விருப்பம் நபர்களுக்கு இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கும்.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா SBI “ஹர் கர் லக்பதி” என்ற புதிய தொடர் வைப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. குறைந்த மாதாந்திர சேமிப்பு மூலம் மக்கள் ஒரு லட்சம் மற்றும் அதற்கும் மேற்பட்ட நிதியை உருவாக்க இந்த திட்டம் உதவுகிறது. மக்கள் தங்களது மாத வருமானத்தில் ஒரு சிறிய தொகையை தொடர்ந்து சேமிக்க விரும்புவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
SBI இன் இந்த லக்பதி திட்டம் பாதுகாப்பான முறையில் முதலீட்டாளர்களில் லட்சாதிபதி ஆகும். இந்தத் திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் மூன்று முதல் பத்து ஆண்டுகள் வரை மாதாந்திர சேமிப்பை செய்யலாம். 10 வயது மற்றும் அதற்கும் மேற்பட்ட குழந்தைகளும் இந்த SBI திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
குழந்தைகள் இந்த திட்டத்தில் சேர்கிறார்கள் என்றால் அவர்களுக்கு தாங்களாகவே கையெழுத்து போட தெரிய வேண்டும். கையொப்பம் போட முடியாத குழந்தைகளுக்கு பெற்றோர்கள் அல்லது சட்டபூர்வமான பாதுகாவலர் இந்த திட்டத்தை தொடங்கி கொடுக்கலாம். இந்தத் திட்டத்தின் முதிர்வு தொகை ரூபாய் ஒரு லட்சத்திலிருந்து தொடங்குகிறது. அவர்கள் தங்களுக்கு விருப்பமான கால அளவு மற்றும் மாதாந்திர தவணை என்ன என்பதையும் தேர்வு செய்து கொள்ளலாம்.
ஒரு வாடிக்கையாளர் மூன்று ஆண்டுகளை தேர்ந்தெடுத்து மாதம் ரூபாய் 2500 டெபாசிட் செய்தால் முதிர்ச்சியில் அவருக்கு ஒரு லட்சம் கிடைக்கும். பத்து ஆண்டுகள் கால அளவை எடுத்து இந்த திட்டத்தை தேர்வு செய்யும்போது மாதாந்திர தவணை ரூபாய் 591 ஆக குறைகிறது. மாதாந்திர தவணை திட்டம் இந்த திட்டத்தை நீங்கள் தொடங்கும் நேரத்தில் பொருந்தக்கூடிய வட்டி விகிதத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும்.
இந்த திட்டத்தில் வட்டி விகிதம் 6.75% வரை உள்ளது. மூத்த குடிமக்களுக்கு 7.25 சதவீதம் ஆகும். SBI ஊழியர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் 8% வட்டி வரை பெறுகிறார்கள். வருமான வரி விதிகளின்படி இந்த திட்டத்தில் டிடிஎஸ் பொருந்தும். இந்த திட்டத்தில் சேர விரும்பும் வாடிக்கையாளர்கள் முதலில் தங்கள் அருகில் உள்ள SBI கிளைக்கு சென்று தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். பிறகு முதிர்வு தொகை மற்றும் கால அளவை தேர்ந்தெடுக்க வேண்டும். அதன் அடிப்படையில் மாதாந்திர தவணை முடிவு செய்யப்படும். குறைந்த அளவிலிருந்தே பணத்தை சேமிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள் என்றால் உங்களுக்கு இந்த திட்டம் சிறப்பானதாக இருக்கும்.
மத்தியப் பிரதேச மாநிலம் சத்தார்பூர் பகுதியில் உள்ள மருத்துவமனையில், பெண் ஒருவருக்கு நான்கு கைகள் மற்றும் நான்கு கால்களுடன் கூடிய…
ஹைதராபாத்தில் 18 வயது மியான்மர் நாட்டு இளம் பெண்ணை வாடகை வீட்டில் பூட்டி வைத்துவிட்டு, தனது 3 நண்பர்களை அனுப்பித்…
உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்நோர் பகுதியில் உள்ள ஒரு மாடல் மதுபானக் கடையில், மது வாங்க வந்த ராஜேஷ் என்பவருக்கும்…
டெல்லியின் ராம்புரா, திரிநகர் பகுதியில் அக்டோபர் 26 ஆம் தேதியிட்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை…
தலைநகர் டெல்லியின் மயூர் விஹார் பகுதியில் அண்மையில் நிகழ்ந்த ஒரு சாலை விபத்து, கவனக்குறைவான ஓட்டுதலால் ஏற்படும் ஆபத்தை வெளிச்சம்…
ஹரியானா மாநிலம் ரோஹ்தக்கில் உள்ள ஜாட் பவன் அருகே அமைந்திருக்கும் தேவிலால் பூங்காவிற்குத் தாயும் மகளும் நடந்து சென்றுகொண்டிருந்தனர். அப்போது…