Categories: சினிமா

என் அப்பாவோட வாழ்க்கைத் தத்துவமே வேற… ஆனா அவர அங்க எல்லோரும் வில்லனாப் பாக்குறாங்க – சாவித்ரியின் மகள் பகிர்ந்த எமோஷனல் தருணம்!

Spread the love

தமிழ் சினிமாவில் சிவாஜி கணேசனுக்கு இணையான நடிப்பாற்றலைக் கொண்டவர் சாவித்ரி. அதனால்தான் அவரை திரையுலகினரும் ரசிகர்களும் நடிகையர் திலகம் என்று அழைத்தனர். ஆந்திராவைப் பூர்விகமாகக் கொண்ட அவர் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் நடித்து புகழ்பெற்றார்.

சாவித்ரிக்கும் மற்ற நடிகைகளுக்கும் உள்ள வித்தியாசமே சாவித்ரி ஒரு பல்துறை வித்தகர் என்பதுதான்.  அவர் படத் தயாரிப்பு மற்றும் இயக்கம் என பலதுறைகளில் கால்பதித்தார். ஆனால் நடிப்பு அளவுக்கு அவருக்கு மற்ற துறைகள் கைகொடுக்கவில்லை. அதனால் தனது சொத்துகளை இழந்து கடைசி காலத்தில் பொருளாதார ரீதியாக நலிவடைந்தார்.

Gemini Ganesan and Savithri

சாவித்ரி தன்னுடன் நடித்த சக நடிகரான ஜெமினி கணேசனை திருமணம் செய்துகொண்டார். ஜெமினி கணேசனுக்கு அப்போது ஏற்கனவே இரண்டு முறை திருமணம் ஆகியிருந்தது. பாப்ஜி மற்றும் புஷ்பவல்லி ஆகிய இருவரும் அவரது முதல் இரண்டு மனைவிகளாக இருந்தன. சாவித்ரி ஜெமினி கணேசன் மேல் காதலில் விழுந்த போது அவருக்கு வயது 16 ஜெமினி கணேசனுக்கு 32 வயது.

ஆனால் அவர்கள் திருமண வாழ்வு நீண்டகாலம் நிலைத்து நிற்கவில்லை. ஒரு கட்டத்தில் இருவரும் பிரிந்துவிட்டனர். சாவித்ரியின் குடிப் பழக்கத்தால் பல உடல் உபாதைகளுக்கு ஆளாகி இறந்தார். இதனால் சாவித்ரியின் இந்த மரணத்துக்கு ஜெமினி கணேசன்தான் காரணம் என பலரும் இப்போது வரை பேசி வருகிறார்.  ஏனென்றால் அவருக்கு குடிப்பழக்கத்தை அறிமுகப்படுத்தியது ஜெமினி கணேசன்தான் என்பது அதற்கு முக்கியக் காரணம்.

Vijaya Chamundeeswari

இந்நிலையில் சாவித்ரி ஜெமினி கணேசன் ஆகியோரின் மகளான விஜய சாமுண்டீஸ்வரி தனது பெற்றோர் பற்றி பல தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதில் “என்னுடைய அம்மா பற்றி தெலுங்கு மக்கள் உணர்வுபூர்மாக கனெக்ட் ஆகியுள்ளனர். ஆனால் அப்பா பற்றி அவர்களுக்கு அவ்வளவாக தெரியாது. அவர்களைப் பொறுத்தவரை ஜெமினி கணேசன் வில்லன்தான். இதை சொல்வதற்கு எனக்குக் கஷ்டமாக இருக்கிறது. ஆனால் அவர்கள் அப்படிதான் பார்த்தார்கள்.

அப்பா, அம்மாவைக் கல்யாணம் பண்ணி ஏமாத்திவிட்டார் என்றுதான் அவர்கள் நினைக்கிறார்கள். என் அப்பாவோட வாழ்க்கைத் தத்துவமே வேறு. அதை யாரும் புரிந்துகொள்வதில்லை. அவர் அந்த காலத்தில் பிறந்திருக்க வேண்டியவரே இல்லை. அவர் ரொம்ப முன்னோக்கி யோசிக்கக் கூடிய ஆள்” எனப் பேசியுள்ளார்.

vinoth

Recent Posts

“விஜய்யை வாழ்த்தினால் தப்பா..?” இதுதான் உண்மையான தலைமை… சாதி, மதம் இல்லாத அரசியலே எனது விருப்பம்… தவெக-வுக்கு ஆதரவாக அஸ்வின் வீசிய அனல் பறக்கும் கருத்துகள்..!!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு வாழ்த்துத் தெரிவித்ததற்காக எழுந்த விமர்சனங்களுக்குப் பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வின் தற்போது பதிலளித்துள்ளார்.…

2 minutes ago

“கேப்டன்னா இப்படி இருக்கணும்” சதம் அடிக்காதது ஏன்? மனம்திறந்து பேசிய சஞ்சு: கிரிக்கெட் உலகமே பாராட்டும் அந்தப் பண்பு..!!

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடினாலும், துரதிர்ஷ்டவசமாக சதம் அடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டார்.…

4 minutes ago

“திடீரென குறுக்கே வந்த மாடுகள்… கட்டுக்கடங்காத கார்”… ஆர்.பி. சௌத்ரியின் கடைசி நிமிடங்கள்…. அதிர்ச்சியில் திரையுலகம்…!

தென்னிந்தியத் திரையுலகில் நூற்றுக்கணக்கான கலைஞர்களுக்கு வாழ்வளித்த 'வெற்றித் தயாரிப்பாளர்' ஆர்.பி. சௌத்ரி (76), மே 5 அன்று ராஜஸ்தான் மாநிலத்தில்…

6 minutes ago

அடுத்த ஷாக்.! “EPS-ஐ நம்பி பாதாளத்திற்குப் போகாதீங்க” விஜய் கிட்ட வந்துருங்க.. அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு புகழேந்தி விடுத்த அதிரடி எச்சரிக்கை..!!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில், காரல் மார்க்ஸ் பிறந்தநாளில் மரியாதை செலுத்திய புரட்சி அதிமுகவின் புகழேந்தி, எடப்பாடி…

7 minutes ago

“ஆதரவு தர முடியாது”… ஓ.எஸ். மணியன் கொடுத்த ‘ஷாக்’ ட்ரீட்… கடைசி நேரத்தில் விஜயை கைவிட்ட எடப்பாடி… தமிழக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, அரசியல் களம் அனல் பறந்து கொண்டிருக்கும் வேளையில், அதிமுகவின் மூத்த தலைவர் ஓ.எஸ்.…

10 minutes ago

“விஜய்யை CM ஆக்குவது ரொம்ப ஈசி” அன்றே கணித்த புஸ்ஸி ஆனந்த்… சொன்னது நடந்துருச்சேப்பா… சோஷியல் மீடியாவை அதிர வைக்கும் தவெக பொதுச்செயலாளரின் பழைய வீடியோ..!!

2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் 100-க்கும் மேற்பட்ட இடங்களை வென்று தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில்,…

12 minutes ago