சத்யராஜ் சார் எல்லார்க்கும் மரியாதைக் கொடுப்பார்… அவரோட வாழ்க்கை ஃபிலாசபி இதுதான் – பிரபலம் பகிர்ந்த தகவல்!

By vinoth on அக்டோபர் 28, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் வில்லனின் அடியாட்களில் ஒருவராக தோன்றி பின்னர் வில்லனாக உருவானவர் சத்யராஜ். தன்னைப் பற்றி பேசும் போது ‘வில்லன் கூட்டத்தில் ஒருவனாக இருந்து ‘எஸ் பாஸ்’ சொல்லியே நான் 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளேன் எனக் கூறியுள்ளார். அதன் பிறகு பாரதிராஜா மற்றும் மணிவண்ணன் ஆகியோர் இயக்கத்தில் அவர் நடித்த படங்கள் அவரை கதாநாயகனாக்கின.

தமிழ் சினிமாவில் தற்போது வரை சிறந்த நடிகராகவும் வில்லனாகவும் கலக்குபவர் நடிகர் சத்யராஜ். ஹீரோவாக நடித்த போது தமிழில் மட்டுமே நடித்து வந்த சத்யராஜ், இப்போது பிறமொழிப் படங்களிலும் நடித்து வருகிறார். சத்யராஜுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.  மகன் சிபிராஜ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஆனால் இப்போதும் தன் மகனை விட பிஸியான நடிகராக இருந்து வருகிறார் சத்யராஜ்.

   

#image_title

   

2005 வரை ஹீரோவாக நடித்து வந்த சத்யராஜுக்கு அப்போது மார்க்கெட் சரிய ஆரம்பித்தது. அதனால் அவர் மீண்டும் குணச்சித்திர வேடங்களில் நடிக்கும் முடிவை எடுத்தார். அந்த முடிவு அவரை இன்று வரை பிஸியான நடிகராக வைத்துள்ளது. தென்னிந்திய மொழிகளில் மட்டும் இல்லாமல் தற்போது இந்தி படங்கள் வரை நடித்துக் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

 

இந்நிலையில் சத்யராஜ் பற்றி இயக்குனர் சுந்தர் சி ஒரு ஆச்சர்யமான தகவலைப் பகிர்ந்துள்ளார். அதில் “சத்யராஜைப் பார்க்க யார் வந்தாலும் அவர் எழுந்து நின்று கைகொடுத்துதான் பேசுவார். அது யாராக இருந்தாலும். அது பற்றி நான் ஒருமுறைக் கேட்ட போது “யாருக்குங்க தெரியும். நாளைக்கு அவனே பெரிய ஆளாகி நம்ம முன்னாடி வந்து நிப்பான். அப்ப மட்டும் எழுந்து நின்னு பேசுனா நம்மளப் பத்தி என்ன நினைப்பான்? அதான் இப்பவே மரியாதைக் கொடுத்து பேசிடுவது என சொல்வார்” எனக் கூறியுள்ளார்.