Categories: சினிமா

“அப்போவே அவர் அப்படி”.. ஒரு பைசா கூட சம்பளம் வாங்காமல்.. டாப் ஹீரோ படத்தில் நடித்த சத்யராஜ்..!

Spread the love

தமிழ் சினிமாவில் 80 காலகட்டத்தில் இருந்து இன்று வரை ஒரு தவிர்க்க முடியாத நடிகராக சத்யராஜ் இருந்து வருகின்றார். முதலில் தயாரிப்பு உங்களிடம் பணிகளை செய்து வந்த சத்யராஜ் அதன் பிறகு தான் ஒரு நடிகராக மாறினார். இவரின் பள்ளிக்கால நண்பரான மணிவண்ணனுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்த அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தினார். அது மட்டுமல்லாமல் மணிவண்ணன் இயக்கிய பெரும் படங்களில் சத்யராஜ் நடித்து இவர்களின் காம்பினேஷனில் நிறைய படங்கள் வெற்றியை கண்டுள்ளது. கதாநாயகன், வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரம் உள்ளிட்ட கதாபாத்திரங்களில் சத்யராஜ் நடித்துள்ளார்.

இவர் எம்ஜிஆரின் தீவிர ரசிகரும் கூட. மேலும் தந்தை பெரியாராக நடித்த திரைப்படத்தில் ஊதியம் வாங்காமல் சத்யராஜ் அந்த திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படி திரைத்துறையின் மதிப்புமிக்க ஒரு நடிகராக இருந்து வருபவர் தான் நடிகர் சத்யராஜ். இவர் குறித்து ஒரு சுவாரஸ்யமான தகவலை நடிகர் சங்கிலி முருகன் ஒரு பேட்டியில் பகிர்ந்து உள்ளார். அதில், விஜயகாந்த் நடிப்பில் வெளியான கரிமேடு கருவாயன் திரைப்படத்தில் நடிக்க சத்யராஜை அழைத்திருந்தோம். அந்த படத்தில் தயங்காமல் நடித்துக் கொடுத்த சத்யராஜ் அந்த படத்தில் நடிக்க சம்பளமே வாங்கவில்லை.

ஒரு பைசா கூட சம்பளம் வாங்காமல் படத்தை முடித்துக் கொடுத்தார். அந்தப் படத்தில் விஜயகாந்தை தவிர யாரும் சம்பளம் வாங்கவில்லை. சத்யராஜ், கவுண்டமணி மற்றும் செந்தில் என அனைவருமே சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுத்தனர். அது மட்டுமல்லாமல் படப்பிடிப்பு செலவுக்காக செந்தில் தனது நகைகளை அடமானம் வைத்து பணம் கொடுத்து உதவினார் என்று சங்கிலி முருகன் பேட்டியில் கூறியுள்ளார்.

Nanthini

Recent Posts

இனி இது இல்லைனா சிலிண்டர் கிடையாது… மத்திய அரசின் அதிரடி உத்தரவால் மக்கள் அதிர்ச்சி…!

மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து முடக்கம் காரணமாக, உலகளாவிய…

2 minutes ago

டிரம்ப் விரித்த வலை… சீனா வைத்த செக்! மே 13-ல் உடையப்போகும் உலக அரசியல் மர்மம்… சீனாவில் டிரம்பிற்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி….!

அமெரிக்க அதிபர் டிரம்ப் மே 13-15 தேதிகளில் மேற்கொள்ளவிருக்கும் சீனப் பயணம், சர்வதேச அரசியலில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சீனா…

8 minutes ago

சட்டசபையில் நடந்த ரகசிய டீல்?… எதிரும் புதிருமான செந்தில் பாலாஜி – எஸ்.பி.வேலுமணி 30 நிமிட ஆலோசனை.. பின்னணியில் இருக்கும் “அந்த” பிளான்..!

தமிழக அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும் விதமாக, பரம எதிரிகளாகக் கருதப்பட்ட திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும், அதிமுக…

15 minutes ago

மீண்டும் ஒர்க் ஃப்ரம் ஹோம்! பிரதமர் மோடியின் அதிரடி அட்வைஸ்.. “எங்க மேனேஜர் கிட்ட நீங்களே சொல்லிடுங்க” கதறும் நெட்டிசன்கள்..!!

இந்தியாவின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, எதிர்கால சவால்களை எதிர்கொள்ள 'வீட்டிலிருந்தே வேலை' செய்யும்…

1 மணத்தியாலம் ago

“என் மகனை இழந்த வலி இன்னும் ஆறல” ஆனா விஜய் CM ஆக பதவியேற்றது.. கரூர் சம்பவத்தில் குழந்தையை இழந்த தந்தையின் உருக்கமான பேட்டி..!!

கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி,…

1 மணத்தியாலம் ago

மும்பையில் அதிர்ச்சி..! கட்டுமானப் பணி அருகே கோர விபத்து.. ஆட்டோ மீது விழுந்த ராட்சத மரம்..! பதைபதைக்க வைக்கும் காட்சிகள்…!

மும்பை காரில் உள்ள கட்டுமானப் பணி நடைபெறும் இடத்திற்கு அருகே, ஆட்டோ மீது ராட்சத மரம் விழுந்த விபத்தில் இரண்டு…

1 மணத்தியாலம் ago