Categories: சினிமா

16 வயதினிலே படத்துக்கும் சுந்தரபாண்டியன் படத்துக்கும் இடையில் இப்படி ஒரு ஒற்றுமை இருக்கா?… சசிகுமார் பகிர்ந்த தகவல்!

Spread the love

சுப்ரமண்யபுரம் என்ற கல்ட் கிளாசிக் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவுக்கு இயக்குனராகவும் நடிகராகவும் அறிமுகமானவர் சசிகுமார். அந்த படத்தின் வெற்றியில் நடிகர் சசிகுமார் வெற்றி பெற, இயக்குனர் சசிகுமாருக்கு நீண்ட ஓய்வை கொடுத்துவிட்டார்.

அதன் பின்னர் அவர் ஈசன் என்ற ஒரே ஒரு படத்தை மட்டுமே இயக்கினார். நாடோடிகள், சுந்தரபாண்டியன் என அவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து ஹிட்டாக தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார். இதன் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு மினிமம் கியாரண்டி நடிகராக உருவானார்.

16 vayathinile

அவர் நடித்த சில படங்கள் சூப்பர் ஹிட்டானதும், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டன. சமீபகாலமாக அவர் படங்கள் எதுவும் ஹிட்டாகாத நிலையில் சமீபத்தில் அயோத்தி மற்றும் நந்தன் ஆகிய கதையம்சம் உள்ள படங்கள் மூலமாகக் கம்பேக் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்துள்ள நேர்காணலில் தன்னுடைய சூப்பர் ஹிட் படமான சுந்தர பாண்டியன் படம் பற்றி பேசியுள்ளார். அதில் “சுந்தர பாண்டியன் படத்தில் விஜய் சேதுபதி வில்லன் என்று சொன்னதும் நான் மறுத்தேன். ஏனென்றால் அப்போது அப்போது அவர் பீட்சா மற்றும் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ஆகிய படங்களில் கமிட்டாகிவிட்டார். அதனால் ஒரு ஹீரோவை ஏன் நம் படத்தில் வில்லன் ஆக்கவேண்டும் என தவிர்த்தேன். ஆனால் அவர் அப்போதே தெளிவாக இருந்தார். நான் ஹீரோ, வில்லன் என்று பார்க்கமாட்டேன் என சொல்லி நடித்தார்.

sundara pandian

அந்த படத்தில் நடித்த நான், சூரி, விஜய் சேதுபதி, இயக்குனர் பிரபாகரன் என எல்லோரும் வேறு வேறு உயரத்துக்கு சென்றோம். இதுபோல 16 வயதினிலே படத்துக்கு நடந்தது. அந்த படத்தில் நடித்த  கமல், ரஜினி, இயக்குனர் பாரதிராஜா, ஸ்ரீதேவி மற்றும் கவுண்டமணி என எல்லோரும் உச்சத்தைத் தொட்டார்கள். சில படங்களுக்கு அப்படி நடக்கும். அந்த வகையில் பதினாறு வயதினிலே படத்துக்கும் சுந்தரபாண்டியன் படத்துக்கும் நடந்தது” எனக் கூறியுள்ளார்.

vinoth

Recent Posts

ரிலீஸ்க்கு முன்பே லீக்… எடிட்டிங் ரூமிலேயே அரங்கேறிய ஜனநாயகன் படத் திருட்டு… சைபர் கிரைம் விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்..!

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம், தணிக்கை சிக்கல்கள் மற்றும் தேர்தல் நடத்தை…

13 minutes ago

“ஜாலியாக இருக்கலாம் வா”… இளம்பெண்ணை அழைத்து சென்று கொடூரமாக கொன்ற மேஸ்திரி… விழுப்புரம் அருகே அரங்கேறிய திக் திக் சம்பவம்…!

புதுச்சேரி மற்றும் தமிழக எல்லைப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம், மனித உறவுகளுக்கு இடையே பணப் பரிமாற்றம்…

23 minutes ago

“அம்மா போன அதே நாளில் நானும் போறேன்”… இளம்பெண் எழுதிய உருக்கமான கடிதம்…. பின்னணியில் இருக்கும் சோகம்…!

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே காந்தி நகரில் வாடகைக்கு தங்கி, ஒரகடம் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் பணியாற்றி வந்த தேனி மாவட்டத்தைச்…

30 minutes ago

#BREAKING: ரேஷன் பொருட்கள் இனி வீடு தேடி வரும்… தமிழ்நாட்டிற்கு இனி தனி ‘AI’ அமைச்சகம்… தவெக-வின் ‘டாப் 10’ அதிரடி வாக்குறுதிகள் இதோ…!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், அக்கட்சியின் கொள்கை முழக்கத்தோடு கூடிய தேர்தல் அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டு அரசியல் களத்தில்…

34 minutes ago

“ஸ்டாலின் சார் போல ஏமாற்ற மாட்டோம்”.. “மாதம் ரூ.2500, இலவச தங்கம், 200 யூனிட் மின்சாரம்”… தமிழகத்தையே அதிரவைத்த தவெக-வின் தேர்தல் அறிக்கை…!

தமிழக அரசியல் களம் 2026 சட்டசபைத் தேர்தலை எதிர்நோக்கி அனல் பறந்து வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்…

37 minutes ago

ஜனநாயகம் லீக் விவகாரம்… “இவங்க தான் காரணம்… விஜய்க்கு சம்மந்தம் இல்லை”… சனம் ஷெட்டி போட்டு உடைத்த ரகசியம்…!!!

நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் கசிந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

45 minutes ago