#image_title
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். ஏழு சீசன்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வந்த கமல்ஹாசன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டார். ஒரு சில தனிப்பட்ட வேலைகள் இருப்பதால் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதாக தெரிகிறது.
அவருக்கு பதிலாக பிரபல நடிகரான விஜய் சேதுபதி பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார். இதற்கான ப்ரோமோ கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி வருகிற அக்டோபர் மாதம் ஆறாம் தேதி முதல் தொடங்க உள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியாகி ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர். கடந்த 2017-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சி 7 சீசன்களை வெற்றிகரமாக கடந்தது.
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மக்களின் ஆதரவை பெற்ற ஏராளமானோர் இருக்கின்றனர். பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் பரணியும் ஓவியாவும், பாதியிலேயே வெளியேறிவிட்டனர். பிக் பாஸ் இரண்டாவது சீசனில் மகத் டேனியுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக வெளியேற்றினார்கள். பிக் பாஸ் மூன்றாவது சீசனில் சரவணன், மதுமிதாவும் பாதியிலேயே வெளியேறி விட்டனர்.
பிக் பாஸ் ஐந்தாவது சீசனில் திருநங்கை நமிதா மாரிமுத்து பாதியிலேயே வெளியேறினார். பிக் பாஸ் ஆறாவது சீசனில் ஜிபி முத்து தனது குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்க முடியாமல் வெளியேறிவிட்டார். பிக் பாஸ் ஏழாவது சீசனில் பவா செல்லதுரை, பிரதீப் ஆகியோர் வெளியேறினர். இதில் பிரதீப் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
ராஜஸ்தான் மாநிலம் சூரு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் எம்.எம். புகார், தனது கல்லூரிக் கட்டிடத்தில் இருந்த தேன்கூடுகளை அப்புறப்படுத்த…
சுவிக்கி (Swiggy) உணவு விநியோக ஊழியர் ஒருவர், 6.2 கிலோமீட்டர் தூரம் பயணித்தற்காகத் தனக்கு வெறும் ₹35 மட்டுமே வழங்கப்பட்டதால்…
நடிகர் விஜய் மற்றும் சங்கீதா இடையிலான விவாகரத்து மனு செங்கல்பட்டு நீதிமன்றத்திலிருந்து கசிந்தது தொடர்பான விவகாரம், தற்போது புதிய திருப்பத்தை…
ரயில் தண்டவாளத்தில் ஒரு குழந்தை நின்று கொண்டிருக்க, மின்னல் வேகத்தில் ரயில் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் அங்கே நின்றிருந்த மனிதர்கள்…
பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் நாகர்கோயிலுக்குச் சென்றபோது, திரு. கோமதம் வீரராகவன் கிரிஜா என்ற சிறுமியைச் சந்தித்த நெகிழ்ச்சியான காணொளி…
இந்தியாவின் போட்டி நிறைந்த வங்கித்துறையில் நிலவும் கடும் பணி அழுத்தம் காரணமாக, 24 வயதான ஐஐடி டெல்லி முன்னாள் மாணவர்…