சுப்ரமண்யபுரத்துல குத்துப் பாட்டா?… சுந்தரபாண்டியனில் தமன்னாவா?… ரீமேக் அட்ராசிட்டி பற்றி ஜாலியாக பேசிய சசிகுமார்!

Spread the love

சுப்ரமண்யபுரம் என்ற கல்ட் கிளாசிக் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவுக்கு இயக்குனராகவும் நடிகராகவும் அறிமுகமானவர் சசிகுமார். அந்த படத்தின் வெற்றியில் நடிகர் சசிகுமார் வெற்றி பெற, இயக்குனர் சசிகுமாருக்கு நீண்ட ஓய்வை கொடுத்துவிட்டார்.

அதன் பின்னர் அவர் ஈசன் என்ற ஒரே ஒரு படத்தை மட்டுமே இயக்கினார். நாடோடிகள், சுந்தரபாண்டியன் என அவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து ஹிட்டாக தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார். இதன் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு மினிமம் கியாரண்டி நடிகராக உருவானார்.

#image_title

அவர் நடித்த சில படங்கள் சூப்பர் ஹிட்டானதும், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டன. அவற்றில் சில படங்கள் அந்தந்த ஊருக்கு ஏற்றமாதிரி கமர்ஷியலாக மாற்றப்பட்டன. அதுபற்றி சசிகுமார் பேசியுள்ளார்.

அதில் “சுந்தர பாண்டியன் படத்தோட தெலுங்கு ரீமேக்ல தமன்னா ஹீரோயினா? லட்சுமி மேனன் வேடத்தில் தமன்னாவா? இது எனக்கு தெரியாதே.. கன்னட ரீமேக் பாத்திருக்கேன். அதுல யாஷ் நடிச்சிருப்பார். அவர் அதைக் கரெக்ட்டா எங்க கிட்ட டிஸ்கஸ் பண்ணி பண்ணார். அந்த படம் நான் பாத்திருக்கேன். நல்ல படம். அப்ப யாஷ் கிட்ட எல்லாம் அடிக்கடி பேசுவேன்.

#image_title

சுப்ரமண்யபுரத்தோட கன்னட ரீமேக் பாக்கல. ஒரு நாள் டிவில ஒரு பாட்டு ஓடுச்சு. அத என்கிட்ட காட்டி இது உன் படம்தான் என்றார்கள். என் படமா? எந்த படம் என்று கேட்டேன். சுப்ரமண்யபுரம் படம் என்றார்கள். அழகரும் பரமனும் குத்து பாட்டுக்கு டான்ஸ் ஆடுறாங்க.. ஆனா அந்த படம் நான் இன்னும் பாக்கல.” எனக் கூறியுள்ளார்.

vinoth

Recent Posts

“13 லட்சம் ஃபாலோயர்கள்… திடீர் விபரீதம்”…. ‘பைனான்ஸ் வித் ஹரிஷ்’ மரணத்தின் பின் உள்ள அதிர்ச்சி உண்மை….!

இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் மூலம் 'பைனான்ஸ் வித் ஹரிஷ்' என்ற பெயரில் நிதி ஆலோசனைகளை வழங்கி வந்த பிரபல இன்ஃப்ளூயன்ஸர்…

13 minutes ago

“இனி தான் ஆட்டமே இருக்கு”…. தமிழகத்தில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை….. வெதர்மேன் கொடுத்த அலெர்ட்….!

தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அவர்களின் சமீபத்திய அறிவிப்பின்படி, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை மேகங்கள் தீவிரமாக…

16 minutes ago

“டெபாசிட் காலி ஆகணும்”…. எதிர்க்கட்சிகளை மிரள வைக்கும் முதல்வர் விஜய்யின் சீக்ரெட் மூவ்…. இடைத்தேர்தல் ரிசல்ட்டால் செம அப்செட்….!

இடைத்தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்த மாபெரும் வெற்றியைத் தராததால் தமிழக முதலமைச்சர் விஜய் சற்று அதிருப்தியில் உள்ளதாகவும், திமுக மற்றும் அதிமுக…

20 minutes ago

ரஜினி இல்லாமல் அரசியலில் இறங்காதீங்க…. தனுஷுக்கு டெல்லி பாஜக போட்ட கண்டிஷன்…. அரசியலில் அதிரடி திருப்பம்..!

நடிகர் தனுஷ் அரசியலில் களமிறங்குவது குறித்து டெல்லியில் பாஜக தேசிய தலைவர்களை சந்தித்துப் பேசியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பாஜக தேசிய…

23 minutes ago

அதிமுகவுக்கு அடுத்த செக்…. தவெகவில் இணையும் 15 எம்.எல்.ஏக்கள்?…. இபிஎஸ்ஸுக்கு பேரதிர்ச்சி…!

தென்காசி சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் தமிழக அரசியல் களத்தில் மிக முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. இத்தேர்தலில் தமிழக வெற்றி கழகத்திற்கு…

2 மணத்தியாலங்கள் ago

“எங்களுக்கு கரும்புதான் முக்கியம்”…. சத்தியமங்கலம் வனப்பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசம்…. பதைபதைக்க வைக்கும் வீடியோ….!

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட திம்பம் மலைப்பாதை மற்றும் மைசூர் தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் வனவிலங்குகளின் நடமாட்டம் எப்போதும் அதிகரித்து…

2 மணத்தியாலங்கள் ago