#image_title
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையன் திரைப்படம் அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் கூலி திரைப்படத்தில் ரஜினிகாந்த் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். கடைசியாக ரஜினிகாந்த் நடிப்பில் ரிலீசாகி சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் ஜெயிலர் இந்த படத்தின் இரண்டாவது பாகத்திலும் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான பேட்ட திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடித்தார்.
இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சிம்ரன், திரிஷா, சசிகுமார் உள்ளிட்டார் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். சமீபத்தில் சித்ரா லட்சுமணன் உடனான ஒரு பேட்டியில் சசிகுமார் கலந்து கொண்டார். அவர் பேட்ட திரைப்படத்தின் போது நடந்த சுவாரசியமான அனுபவங்களை பகிர்ந்தார். அவர் கூறியதாவது, ரஜினி சார் கேரவனுக்கு போகவே மாட்டாரு. வண்டியில் இருந்து இறங்கிட்டா ஷூட்டிங் ஸ்பாட்ல சேர் போட்டு அங்கேயே உட்கார்ந்திருப்பாரு.
பிரேக்ன்னு சொன்னா டைரக்டர் கிட்ட கேட்டு தான் போவாரு. காஸ்ட்யூம் மாத்தும்போது ரோட்ல நின்னு டிரஸ் மாற்றினார். ஒரு கைலிய மட்டும் வச்சுக்கிட்டு டிரஸ் மாத்திட்டாரு. அதனை எதிர்பார்க்கவே இல்ல. என் அசிஸ்டன்ட் என்ன கேரவனுக்கு வந்து டிரஸ் மாத்துங்கன்னு கூப்பிட்டார். உடனே நான் சூப்பர் ஸ்டாரே ரோட்ல நின்னு டிரஸ் மாத்துறாரு. நம்ம மாத்துனா என்னனு நானும் அங்க நின்னு தான் டிரஸ் மாற்றினேன். அந்த விஷயத்தை நாம அவங்க கிட்ட இருந்து தான் கத்துக்கணும்.
நான் ஒரு படத்துல ஹீரோவா நடிச்சா என்னதான் முதல்ல கூப்பிடனும்னு சொல்லுவேன். அவங்க வந்துட்டாங்களா, இவங்க வந்துட்டாங்களா, யாரு முதல்ல போனா, யாரு கடைசியில் போனா அப்படின்னு பார்க்க கூடாது. எந்த ஒரு ஆர்ட்டிஸ்டும் ஸ்பாட்டுக்கு முதல்ல போய் யாரு நிக்கிறது என்று பார்க்கிறது கிடையாது. எல்லாரும் வந்துட்டா கடைசியா தான் ஹீரோவை கூப்பிடனும்னு நினைக்கிறாங்க. அது ஒரு கௌரவ பிரச்சனை மாதிரியா நினைக்கிறாங்க. ஆர்ட்டிஸ்ட்டுக்கு அந்த பொறுப்பு வேணும். நான் தான் முதல்ல போய் சூட்டிங் ஸ்பாட்ல நிக்கணும் அப்படின்னு நினைக்கணும் என கூறியுள்ளார்.
ஸ்பெயினைச் சேர்ந்த காவல்துறை தம்பதியரான ஜெசிகா முனோஸ் பரேடஸ் மற்றும் பெலாயோ அல்வாரெஸ் ரெவூல்டா ஆகியோர், ஒருவருக்கொருவர் கைவிலங்கு அணிந்தபடி…
குவஹாத்தி செல்லும் ரயிலில் பயணம் செய்த அமித் அவஸ்தி என்ற பயணி, தனது உணவில் பாதிக்கு மேல் சாப்பிட்ட பிறகு…
அசாம் ரயில் விபத்து நிகழ்வதற்குச் சற்று முன்பு, ரயில் இன்ஜின் அறைக்குள் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.…
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள இந்திய மக்கள் தொகை கணக்கீட்டு பலகையின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.…
மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டம் பன்வெல் அருகே உள்ள களம்போலி பகுதியில் கடந்த திங்கள்கிழமை இரவு காவல்துறையினர் வழக்கமான 'நாகாபந்தி'…
கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் அருகேயுள்ள மத்திக்கோடு பகுதியில் நிகழ்ந்த கோர இருசக்கர வாகன விபத்தில், பூதப்பாண்டியைச் சேர்ந்த 13 வயது…