Categories: சினிமா

சுப்ரமண்யபுரம் வெற்றி கூட எனக்குப் பெருசில்ல… நான் சினிமாவில் செய்த சாதனை என்றால் அது இதுதான் –சசிகுமார் நெகிழ்ச்சி!

Spread the love

தமிழ் சினிமாவில் தன்னுடைய தனித்துவமான பாணியால் இயக்கம் மற்றும் ஒளிப்பதிவு இரண்டிலும் முத்திரை பதித்தவர் இயக்குனர் பாலு மகேந்திரா. அவர் இயக்கிய வீடு, சந்தியா ராகம், மூன்றாம் பிறை உள்ளிட்ட படங்கள் தமிழ் சினிமாவின் பொக்கிஷமாக உள்ளன. அவர் இயக்கிய அழியாத கோலங்கள், மூடுபனி, மூன்றாம் பிறை ஆகிய படங்கள் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றிப்படமாக அமைந்தன.

இடையில் பாலு மகேந்திரா இயக்கிய சில படங்கள் வணிக ரீதியாக சரியாக போகவில்லை. அதனால் அவர் பொருளாதார நெருக்கடியில் இருந்துள்ளார். அப்போது அவருடன் பணியாற்றிய கமலஹாசன் மற்றும் சில்க் ஸ்மிதா போன்றவர்கள் அவருக்கு பொருளாதார ரீதியாக உதவிகளை செய்துள்ளனர்.

90 களின் இறுதியில் பாலு மகேந்திரா கிட்டத்தட்ட திரைப்படங்களை இயக்கும் வாய்ப்பை இழந்தார். அதனால் தொலைக்காட்சியில் கதை நேரம் என்ற பெயரில் பிரபல எழுத்தாளர்களின் கதைகளை சினிமாவாக எடுத்துள்ளார். அதன் பின்னர் அவர் சில படங்களை இயக்கினாலும் அவை பெரியளவில் கவனம் பெறவில்லை. அதன்பின்னர் அவரின் உதவி இயக்குனர்கள் அடுத்தடுத்து படங்களை இயக்கி அவருக்கு பெருமை சேர்த்தனர்.

பாலு மகேந்திரா கடைசியாக இயக்கிய படம் ‘தலைமுறைகள்’. இந்த படத்தில் அவர் நடிகராகவும் பங்களித்திருந்தார். இந்த படத்தை சசிகுமார் தன்னுடைய நிறுவனம் மூலமாக தயாரித்திருந்தார்.  இந்த படம் உருவானது குறித்து சசிகுமார் ஒரு நேர்காணலில் “ஒரு நாள் பாலு மகேந்திரா சார் எனக்கு போன் செய்து ‘தலைமுறைகள்’ படம் பற்றி சொன்னார். அதை நான் தயாரிக்க வேண்டும் என்றார். எல்லாக் கதவுகளையும் தட்டியபின்னரே என்னிடம் வருவதாக சொன்னார்.

அப்போது நாங்கள் எடுத்த ஒரு படம் வேறு தோல்வி அடைந்திருந்தது. அதனால் என் மேனேஜர் எல்லாம் வேண்டாம் என்றார்கள். ஆனால் என்னைத் தேடிவந்த அவரை நான் எப்படி வெறும் கையோடு அனுப்புவது. அதனால் நான் அந்த படத்தைத் தயாரிக்கிறேன் என்றேன். எனக்கு சினிமாவில் சாதனை சுப்ரமணியபுரம் எல்லாம் இல்லை. பாலு மகேந்திரா சாரின் படத்தைத் தயாரித்ததுதான்” எனக் கூறியுள்ளார்.

vinoth

Recent Posts

“13 லட்சம் ஃபாலோயர்கள்… திடீர் விபரீதம்”…. ‘பைனான்ஸ் வித் ஹரிஷ்’ மரணத்தின் பின் உள்ள அதிர்ச்சி உண்மை….!

இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் மூலம் 'பைனான்ஸ் வித் ஹரிஷ்' என்ற பெயரில் நிதி ஆலோசனைகளை வழங்கி வந்த பிரபல இன்ஃப்ளூயன்ஸர்…

14 minutes ago

“இனி தான் ஆட்டமே இருக்கு”…. தமிழகத்தில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை….. வெதர்மேன் கொடுத்த அலெர்ட்….!

தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அவர்களின் சமீபத்திய அறிவிப்பின்படி, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை மேகங்கள் தீவிரமாக…

17 minutes ago

“டெபாசிட் காலி ஆகணும்”…. எதிர்க்கட்சிகளை மிரள வைக்கும் முதல்வர் விஜய்யின் சீக்ரெட் மூவ்…. இடைத்தேர்தல் ரிசல்ட்டால் செம அப்செட்….!

இடைத்தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்த மாபெரும் வெற்றியைத் தராததால் தமிழக முதலமைச்சர் விஜய் சற்று அதிருப்தியில் உள்ளதாகவும், திமுக மற்றும் அதிமுக…

22 minutes ago

ரஜினி இல்லாமல் அரசியலில் இறங்காதீங்க…. தனுஷுக்கு டெல்லி பாஜக போட்ட கண்டிஷன்…. அரசியலில் அதிரடி திருப்பம்..!

நடிகர் தனுஷ் அரசியலில் களமிறங்குவது குறித்து டெல்லியில் பாஜக தேசிய தலைவர்களை சந்தித்துப் பேசியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பாஜக தேசிய…

25 minutes ago

அதிமுகவுக்கு அடுத்த செக்…. தவெகவில் இணையும் 15 எம்.எல்.ஏக்கள்?…. இபிஎஸ்ஸுக்கு பேரதிர்ச்சி…!

தென்காசி சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் தமிழக அரசியல் களத்தில் மிக முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. இத்தேர்தலில் தமிழக வெற்றி கழகத்திற்கு…

2 மணத்தியாலங்கள் ago

“எங்களுக்கு கரும்புதான் முக்கியம்”…. சத்தியமங்கலம் வனப்பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசம்…. பதைபதைக்க வைக்கும் வீடியோ….!

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட திம்பம் மலைப்பாதை மற்றும் மைசூர் தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் வனவிலங்குகளின் நடமாட்டம் எப்போதும் அதிகரித்து…

2 மணத்தியாலங்கள் ago