Categories: சினிமா

அந்த படம் சரியாக ஓடாததற்கு காரணமே நடிகர் சசிகுமார் தான்.. ஒரே போடாய் போட்ட பிரபல தயாரிப்பாளர்..!

Spread the love

வெற்றிவேல் திரைப்படம் ஓடாமல் போனதற்கு காரணம் நடிகர் சசிகுமார் தான் என்று அப்படத்தின் தயாரிப்பாளர் ஒரு பேட்டியில் கூறி இருக்கின்றார். தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி பின்னர் ஹீரோவாக நடித்த வருபவர் நடிகர் சசிகுமார். தமிழில் இயக்குனர் நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட சசிகுமார் 2008 ஆம் ஆண்டு சுப்ரமணியபுரம் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. இப்படத்தின் மூலமாக தான் நடிகர் சசிகுமார் இயக்குனராகவும் நடிகராகவும் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தில் அவருடன் சேர்ந்து ஜெய், சமுத்திரக்கனி, சுவாதி, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தார்கள். அந்த ஆண்டின் சிறந்த திரைப்படத்திற்கான பல்வேறு விருதுகளை அள்ளி குவித்தது.

அதன் பின்னர் ஈசன் என்ற திரைப்படத்தையும் இயக்கியிருந்தார். தொடர்ந்து இயக்கத்தை கைவிட்டு ஹீரோவாக நடித்து வந்த இவர் நாடோடிகள், போராளி, சுந்தரபாண்டியன், குட்டி புலி, பிரம்மன், தாரை தப்பட்டை, வெற்றிவேல், கிடாரி, பலே வெள்ளைய தேவா, கொடிவீரன், அசுரவதம், பேட்ட, நாடோடிகள் 2, அயோதி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். கடைசியாக சூரி உடன் இணைந்து கருடன் திரைப்படத்தில் நடித்து அசத்தி இருக்கின்றார்.

தொடர்ந்து படங்களில் நடித்து வரும் சசிகுமார் இயக்கத்திலும் கவனம் செலுத்தி வருகின்றார். இவருக்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் ஒரு மகள் என இரண்டு பிள்ளைகள் இருக்கின்றார்கள். சினிமாவில் பிஸியாக வலம் வரும் சசிகுமார் 2016 ஆம் ஆண்டு வெளியான வெற்றிவேல் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தை வசந்த மணி இயக்கியிருந்தார். ட்ரென்ட்ஸ் ஆர்ட்ஸ் சார்பாக ரவிந்திரன் இந்த திரைப்படத்தை தயாரித்திருந்தார்.

இப்படத்தில் சசிகுமாருடன் இணைந்து தம்பி ராமையா, பிரபு, ரேணுகா, விஜி என பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். டி இமான் இசையமைத்திருந்த இந்த திரைப்படம் சுமாரான வெற்றியை பெற்றிருந்தது. இந்நிலையில் இந்த படத்தின் தோல்விக்கு நடிகர் சசிகுமார் தான் காரணம் என தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் ஒரு பேட்டியில் கூறி இருக்கின்றார்.

அதாவது அந்தப் படத்தை சரியான நேரத்தில் வெளியிட முடியவில்லை என்று கூறிய அவர் சசிகுமாரின் அடுத்தடுத்த மூன்று திரைப்படங்கள் தோல்வியை சந்தித்த காரணத்தினால் இந்த திரைப்படத்தின் ஓப்பனிங் சரியாக அமையவில்லை. மேலும் இந்த திரைப்படம் நன்றாக சென்று இருக்கக்கூடிய படம். சசிகுமாருக்கு அப்போதுதான் மார்க்கெட் டவுனாக இருந்தது. அந்த சமயத்தில் இந்த திரைப்படத்தை வெளியிட்டதால் இந்த திரைப்படத்தை பார்ப்பதற்கு யாரும் வரவில்லை. அதனால் இப்படம் தோல்வி படமாக அமைந்தது என்று அந்த படத்தின் தயாரிப்பாளர் கூறியிருந்தார்.

Mahalakshmi

Recent Posts

அடேங்கப்பா…! “ஸ்பெஷல் பாக்ஸ்”… வெறும் பேப்பர் கார்டு இல்ல… நகை பெட்டியே உள்ளே இருக்கு… அனிருத் – காவ்யா திருமண அழைப்பிதழின் பிரம்மாண்டம்…!!

இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளரான காவ்யா மாறன் ஆகியோரின் திருமண வரவேற்பு அழைப்பிதழ் இணையத்தில்…

1 minute ago

“24 மணிநேரத்தில் மாறிய வாழ்க்கை”…. மனு கொடுத்த ஒரே நாளில் இளைஞருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த CM விஜய்……!

சென்னை கிண்டியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய (ITI) வளாகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியின் போது, தினேஷ் என்ற மாற்றுத்திறனாளி…

7 minutes ago

“உன் மனைவியை என்னால் மறக்க முடியல…” காதலியின் கணவருக்கு மெசேஜ்… முன்னாள் காதலனுக்கு அரிவாள் வெட்டு… கன்னியாகுமரியில் அரங்கேறிய பயங்கரம்…!!

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே, தன்னைவிட்டுவிட்டு வேறு திருமணம் செய்துகொண்ட முன்னாள் காதலிக்குத் தொடர்ந்து தொல்லை கொடுத்து, அவரது கணவனின்…

9 minutes ago

சதித்திட்டம்..! “கணவனை முடிச்சிடு”… அந்த ஒரு ஆதாரம்!… ஜிம் ட்ரெய்னரிடம் மனைவி போட்ட டீல்… கடைசியில் அம்பலமான அதிர்ச்சி பின்னணி…!!

உடற்பயிற்சிக் கூடத்தில் ஏற்பட்ட தகாத நட்பின் காரணமாக, தனது கணவரைக் கூலிப்படையை ஏவிக் கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்ற…

10 minutes ago

“என் காதலை தடுப்பீங்களா?”… வீடு புகுந்து வெறிச்செயல்… அடுத்தடுத்து பறிபோன 2 உயிர்கள்… தப்பியோடிய காதலன் சிக்கியது எப்படி?…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் வீட்டுக்குள் புகுந்து நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில் தாய் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முடலூர் கிராமத்தில்…

21 minutes ago

மளிகை கடைக்கு போகாதீங்க!… இல்லத்தரசிகளுக்கு ஜாக்பாட்… ரூ.200-க்கு 10 மளிகைப் பொருட்களா?!… தமிழ்நாடு அரசின் அதிரடி அறிவிப்பு…!!

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் பொதுமக்கள் குறைந்த விலையில் அத்தியாவசிய மளிகைப் பொருட்களை வாங்கும் வகையில், ரூ.200-க்கு 10 வகையான…

31 minutes ago